சென்னை: கல்யாணத்தை பண்ணிப்பார்.. வீட்டைக் கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள். கல்யாணம் செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. முதலில் வரன் பார்ப்பது, அதன் பிறகு நிச்சயம் செய்வது, உறவினர்கள் அனைவருக்கும் துணி எடுப்பது என ஆரம்பித்து பத்திரிக்கை அடிப்பது, மண்டபம் பிடிப்பது, சமையல்காரரைத் தேர்வு செய்வது, திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குவது என சொல்லிக் கொண்டே போகலாம். எனவே, ஒரு கல்யாணத்திற்கு நிதி திட்டமிடல் மிகவும் அவசியமாகிறது. அப்பொழுதுதான் திறம்பட ஒரு கல்யாணத்தை, கடன் வாங்காமல் நடத்தி முடிக்க முடியும். நீங்கள் புதிதாக திருமணமாக இருக்கும் நபர் எனில், உங்களுக்குத் தான் இந்தப் பதிவு.
பட்ஜெட்டை உருவாக்கவும்: பொதுவாக கல்யாணம் என்று வரும்போது மக்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். எந்தெந்த விஷயத்திற்கு செலவழிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. திருமணச் செலவுகளின் உச்சவரம்பை தீர்மானியுங்கள். அவற்றில் முதன்மையான செலவுகளை முதலில் குறிப்பிடுங்கள். பிறகு குறைந்தபட்ச செலவுகளை கீழே குறிப்பிடுங்கள். மேலும் எங்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். இதில் உங்கள் மொத்த செலவுகள் பற்றிய புரிதல் உங்களுக்கு கிடைக்கும்.

முதன்மையான செலவுகளுக்கு பணம் ஒதுக்குங்கள்: திருமணத்தின் முக்கியமான செலவுகள் என்னென்ன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். உதாரணமாக மாலைகள், தங்க நகைகள், திருமண மண்டபம், உணவு, தேவைப்பட்டால் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் அடங்கும். அதிலும் சிலர் தற்போது போட்டோ ஷூட்கள் திருமணத்திற்கு முன்பே நடத்த வேண்டும் என்ற ஆசைப்படுகின்றனர். உங்களிடம் உள்ள பணத்தின் அளவை மதிப்பீட்டு, நீங்களே அதைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.
செலவுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்: திருமண செலவுகளை எப்படி ஒப்பிட்டு பார்ப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. செலவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் எளிதான ஒன்றே. உதாரணமாக, நீங்கள் திருமணத்திற்கு மண்டபத்தை முன்கூட்டியே புக் செய்கிறீர்கள்.. என்று வைத்துக் கொள்வோம். ஒரு மண்டபத்தை பிடிப்பதற்கு முன்பு மற்ற மண்டபங்களையும் பார்வையிட வேண்டும். ஒரு வேலை அந்த மண்டபங்களில் வாடகை குறைவாக இருந்தால், நீங்கள் அதனை பயன்படுத்தலாம். இதுபோல ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
திருமண உடைகள்: அதேபோல திருமண உடைகளுக்கு ரூ. 50,000, ரூ. 80,000 என்று செலவு செய்வதைக் குறைக்கலாம். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் அந்த ஆடைகளை அணிவோம். மற்ற நேரங்களில் இது உங்களுடைய பீரோக்களில் தான் இருக்கும். இது போன்ற செலவுகளைத் தவிர்க்க தேவையான உடைகளை வாடகைக்கு எடுக்க முயற்சிக்கலாம். திருமணம் ஒரு முறை தான் நடக்கிறது.. உடைகளில் இவ்வளவு மிச்சம் தேவையா என்று கேட்பவர்களுக்கு.. ஒரே ஒரு பதில் தான். உங்களிடம் இருக்கும் நிதியின் அளவைப் பொறுத்து நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். இருக்கும் பணத்தில் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று சொல்வோருக்கு தான் இந்த ஐடியா.
கடன் விருப்பங்களை ஆராயுங்கள்: திருமணச் செலவுகளை சமாளிக்க கடன் விருப்பங்களை ஆராய வேண்டும். சில நேரங்களில் உங்கள் கணிப்பு தவறாக போகலாம். உண்மையான செலவுகள் என்ன என்பதை திட்டமிடுவதற்காக தான் முதலில் பட்ஜெட்டை உருவாக்க வேண்டும் என்று பார்த்தோம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெரிய தொகையை திருமணத்திற்காக வாங்குவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. இதனை இந்தப் பதிவைப் படிக்கும் நபர்கள் முன்பே உணர்ந்திருப்பீர்கள்.. என்று நினைக்கிறன். அத்தகைய சூழ்நிலையில் கடன் வாங்குவதை நாம் திறம்பட செய்ய வேண்டும். சிலர் திருமணத்திற்கு எவ்வளவு கடன் தேவை என்று கூட தெரியாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி விடுகின்றனர். அதன் பிறகு அனைத்தையும் காலியாக்கி விட்டு திரும்பவும் பணமில்லாமல் கடன் வாங்குகின்றனர். இதனால் இரண்டு கடன்கள் ஏற்படலாம். மேலும், அதற்கு தனித்தனியாக, நீங்கள் வட்டி செலுத்த நேரிடலாம். எனவே நீங்கள் கடன் வாங்கும் போது இந்த காரணிகளை எல்லாம் சிந்திப்பது நல்லது.
தேவையற்ற ஷாப்பிங்-ஐ தவிர்க்கலாம்: திருமணத்தில் ஷாப்பிங் ஒரு முக்கிய பங்கு வகிறது ஆனால் பெண் மணமகள் இருவரும் சேர்ந்து தங்களுக்கு தேவையான ஆடைகள் மற்றும் ஆபரணங்களை பர்ச்சேஸ் செய்வது வழக்கமானது தான். ஆனால் அதற்காக தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம். மணமகள் ஒரு நாள் அணியக்கூடிய ஜுவல்லரி செட்டுக்கு அதிக செலவு செய்வதற்கு பதிலாக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து டிப்ஸ்களும், பட்ஜெட்டில் திருமணம் நடத்தி முடிக்க வேண்டும் என்று எண்ணும் நபர்களுக்கு உரியது. அதேபோல கல்யாணத்திற்கு பிறகு நீங்கள் செலவு செய்த தொகை, கடன் வாங்கியதாக இருந்தால், அதனை வட்டியுடன் சேர்த்து நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொண்டு செலவு செய்யுங்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications