ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பவர்களுக்கோ அல்லது மொத்தமாக சேமிப்பவர்களுக்கோ மியூச்சுவல் ஃபண்ட் சரியானது என்பது குறித்த விழிப்புணர்வு தற்போது பலருக்கு உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்ட் என்பது நீண்ட கால முதலீட்டிற்கு தான் சிறந்தது என்றும் நீண்ட காலம் முதலீடு செய்தால் மட்டுமே அதில் இருந்து அதிக வருமானம் வரும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு சில நாட்களுக்கு மட்டும் முதலீடு செய்ய முடியுமா என்றால் முடியும் என்பதே அதில் உள்ள சிறப்பு ஆகும். அப்படி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது என்பதும் அது என்ன ஃபண்ட் என்பதையும் தற்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் பல விதமான திட்டங்களில் ஒன்று ஓவர்நைட் ஃபண்ட் ஆகும். இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் ஒரு சிறிய அளவில் வட்டி விகிதத்தை தரும் திட்டமாகும்.
ஓவர்நைட் ஃபண்ட்
நீங்கள் ஒருவேளை மியூச்சுவல் ஃபண்டிற்கு புதியவராக இருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்து அதன் பின்னர் மற்ற ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியானதாக இருக்கும்.
அடுத்த நாளே முதிர்ச்சி
ஓவர்நைட் ஃபண்ட் என்பது ஒரு ஓப்பன் - எண்ட் வகை ஃபண்ட்ஆகும். இந்த ஃபண்ட் அடுத்த நாளே முதிர்ச்சி அடையும் வகையில் செக்யூரிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். அதாவது உங்கள் போர்ட்போலியோ உள்ள இந்த ஃபண்ட் ஒவ்வொரு நாளும் முதிர்ச்சி அடையும்.
ஃபண்ட் மேனேஜர்கள்
பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு வருடத்திற்கு முன்பு பணத்தை எடுத்தால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இதில் முதலீடு செய்த அடுத்த நாளே பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஃபண்ட் மேனேஜர்கள் உங்களது ஃபண்டை அடுத்த நாளே முதிர்ச்சி அடையும் அல்லது உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்வார்கள்.
வட்டி விகிதம்
ஆனால் அதே நேரத்தில் ஓவர்நைட் ஃபண்டில் கிடைக்கும் வட்டி விகிதம் அதிகமாக கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் இந்த ஃபண்டுகளில் மிகவும் குறைவான ரிஸ்க் இருப்பதால் வருமானமும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகர்கள்
வணிகம் செய்பவர்கள், புதிதாக தொழில் செய்பவர்கள் ஒரு சில நாட்களுக்கு மட்டும் பணத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த ஓவர்நைட் ஃபண்ட்களை தேர்வு செய்யலாம். அவர்கள் அந்த தொகையை வேறு முதலீட்டுக்கு பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு சிறிய காலத்திற்கு சிறிய வருமானத்துடன் கூடிய திட்டமாக இந்த ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
15 நாட்களுக்கு முதலீடு செய்யலாமா?
உதாரணமாக நீங்கள் நவம்பர் 15ஆம் தேதி ஒரு தொழில் தொடங்குவதற்காக ஒரு பெரிய தொகையை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இன்று நவம்பர் 1ஆம் தேதி என்றால் இந்த 15 நாட்களுக்கு வங்கியில் வைத்திருந்தால் மிகக் குறைந்த வட்டி விகிதம் தான் கிடைக்கும். ஆனால் அதற்கு பதிலாக ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபண்டில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications