கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பார்த்து பார்த்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, நம் எல்லோருடைய மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி, எந்த ஃபண்ட் அதிக வருமானத்தை கொடுக்கும் என்பது தான். சந்தையில் பல ஆயிரம் திட்டங்கள் இருந்தாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக இருக்கும், ஹெச் டி எஃப் சி, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல், பாராக் பரிக் மற்றும் எஸ் பி ஐ -ன் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளின் 1, 3 மற்றும் 5 ஆண்டுகால செயல்பாடுகளைத் துல்லியமான தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்கிறது. முதலீட்டாளர்களை லாபகரமாக பாதைக்கு அழைத்து சென்றது யார், சந்தை சரியும்போதும் சளைக்காமல் போராடியது எது? 2025ன் முடிவில் ஒரு ஸ்மார்ட்டான முதலீட்டாளர்களின் சாய்ஸ் எதுவாக இருந்திருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

இது தான் பெஸ்ட் சாய்ஸ்!
சந்தையின் போக்கு எப்படி இருந்தாலும் லாபத்தை பிடிக்க வேண்டுமானால், அதற்கு ஃபிளெக்ஸி -கேப் ஃபண்டுகளே பெஸ்ட் சாய்ஸ் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் சந்தையின் போக்கிற்கு ஏற்ப லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் என எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யும் முழு சுதந்திரமும் ஃபிளெக்ஸி -கேப் ஃபண்ட் மேலாளர்களுக்கு உண்டு. இந்த நெகிழ்வுத் தன்மை தான் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான அம்சமாக உள்ளது.
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்(டேரக்ட் குரோத்)
கடந்த ஜூலை 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஃபண்டானது, சந்தைக்கு ஒரு புது வரவாகும். ஆட்டோமொபைல், வங்கித் துறை மற்றும் தொழில்நுட்ப பங்குகள், தொழில்துறை பங்குகளில் அதிக முதலீடு செய்துள்ள இந்த ஃபண்ட், குறிப்பாக டிவிஎஸ் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச் டி எஃப் சி வங்கி உள்ளிட்ட பங்குகளை கொண்டுள்ளது. அதோடு இன்ஃபோசிஸ், எல்&டி மற்றும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
டிசம்பர் 29 நிலவரப்படி, இந்த ஃபண்டின் ஒரு வருட வருமானம் 8.73% ஆகும், இது அதன் பெஞ்ச்மார்க் குறியீட்டின் 10.24% வருமானத்தை விட குறைவு. இதுவே 3 ஆண்டு வருமானத்தை பார்க்கும்போது 19.98% ஆகவும் உள்ளது. இந்த ஃபண்டானது தொடங்கி இன்னும் 5 ஆண்டுகள் முடிவடையவில்லை.
ஹெச் டி எஃப் சி ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்
ஹெச் டி எஃப் சி ஃபிளெக்ஸி கேப் ஃபண்டானது கடந்த ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. பழமையான ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. வங்கி மற்றும் நிதிச் சேவைகளில் அதிக முதலீடுகளை இந்த ஃபண்டானது கொண்டுள்ளது.
இந்த ஃபண்டானது ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ் பி ஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட வங்கி பங்குகளிலும், சிப்லா, மாருதி சுசுகி, ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
இந்த ஃபண்டில் டிசம்பர் 29 நிலவரப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 24.26% வருமானத்தை அள்ளித் தந்து, தனது பெஞ்ச்மார்க்கை (16.78%) விட வெகுவாக முன்னேறியுள்ளது. இதே மூன்று வருடத்தில் 21.80% வருமானத்தையும், 1 வருடத்தில் 10.66% வருமானத்தையும் கொடுத்துள்ளது.
பராக் பரிக் ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்
கடந்த மே 2013ல் தொடங்கப்பட்ட பராக் பரிக் ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் ஆனது, வித்தியாசமான அணுகுமுறைக்காக அறியப்படுகிறது. நுகர்வு, பொதுத்துறை மற்றும் டெலிகாம் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த ஃபண்டானது ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஐடிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல் மற்றும் மாருதி சுசுகி, பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட பங்குகளை அதன் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது.
டிசம்பர் 26 நிலவரப்படி, இந்த ஃபண்டானது ஒரு வருடத்தில் 8.56% வருமானமும் (பெஞ்ச் மார்க் வருமானம் 6.53%), மூன்று ஆண்டுகளில் 23.07% வருமானமும் (பெஞ்ச் மார்க் வருமானம் 16.29%), 5 ஆண்டுகளில் 21.04 வருமானமும் ((பெஞ்ச் மார்க் வருமானம் 16.78%) கொடுத்து வலுவான செயல்பாட்டை காட்டியுள்ளது.
எஸ்பிஐ ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்
கடந்த 2013ல் தொடங்கப்பட்ட எஸ்பிஐ ஃபிளெக்ஸி கேப் ஃபண்டானது, வங்கி முதல் ஆட்டோமொபைல் வரையில் பல துறைகளில் முதலீடு செய்துள்ளது.
இந்த ஃபண்டானது ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகளை அதன் போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது.
டிசம்பர் 26 நிலவரப்படி, இந்த ஃபண்டானது ஒரு வருடத்தில் 5.58% வருமானமும் (பெஞ்ச் மார்க் வருமானம் 5.21%), மூன்று ஆண்டுகளில் 15.12% வருமானமும் (பெஞ்ச் மார்க் வருமானம் 14.61%), 5 ஆண்டுகளில் 15.61 வருமானமும் ((பெஞ்ச் மார்க் வருமானம் 15.30%) கொடுத்து வலுவான செயல்பாட்டை காட்டியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications