ஏன் மிடில் கிளாஸாகவே இருக்கிறீர்கள்? பணக்காரர்களின் இந்த 5 பழக்கவழக்கங்களை வளர்த்துக்கோங்க..!

கடினமாக உழைத்தால் முன்னேறலாம், இது நமக்கெல்லாம் சிறுவயதிலிருந்தே சொல்லி கொடுக்கப்பட்ட பாடம். ஆனால், காலையில் எழுந்தது முதல் இரவு வரை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நடுத்தர வர்க்க குடும்பங்களில், மாதக் கடைசியில் மிஞ்சுவது என்னவோ வெறும் பற்றாக்குறையும், கவலையும் தான்.

ஒருபுறம், ஒரு சிறிய அவசரத் தேவைக்கு கூட யாரிடமாவது கைநீட்ட வேண்டிய சூழல். மறுபுறம் பணம் பணத்தைத் தேடி வரும் வித்தையைத் தெரிந்துகொண்டு, மிக அநாயாசமாக தங்கள் செல்வத்தை பெருக்கிக் கொண்டே போகும் ஒரு கூட்டம். அவர்களுக்கும் நமக்கும் உழைப்பில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், அவர்கள் உலகத்தை பார்க்கும் பார்வையிலும், அவர்கள் அன்றாடம் பின்பற்றும் பழக்கங்களிலும் தான் மிகப்பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது.

ஏன் மிடில் கிளாஸாகவே இருக்கிறீர்கள்? பணக்காரர்களின் இந்த 5 பழக்கவழக்கங்களை வளர்த்துக்கோங்க..!

பணம் என்பது வெறுமனே ஒரு காகிதம் மட்டுமல்ல, அது ஒரு வாய்ப்பு. அது ஒரு சுதந்திரம். அந்த சுதந்திரத்தை நீங்கள் அடைய விடாமல் தடுப்பது உங்கள் வருமானம் அல்ல, மாறாக உங்களை அறியாமலேயே நீங்கள் பற்றிக் கொண்டிருக்கும் சில நடுத்தர வர்க்கப் பழக்கங்கள்தான். அந்த பழக்கங்களை உடைத்தெறிந்து, செல்வந்தர்களின் பாதையில் பயணிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கையின் நிதி நிலையை அடியோடு மாற்றப்போகும் அந்த 5 பழக்கவழக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்..

செலவா? முதலீடா?

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வழக்கமான வருமானத்தை விட, கூடுதல் வருமானம் கிடைத்தால், அதன் மூலம் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்கிறார்கள். அதை அப்படியே செலவு செய்து விடுகிறார்கள். ஆனால் பணக்காரர்களோ அப்படியில்லை. அதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறார்கள். சம்பளம் உயர்ந்தால், அதற்கேற்ப கார், பெரிய வீடு, ஆடம்பரச் சுற்றுலா எனச் செலவு செய்யாமல் முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை பணத்தை மேற்கொண்டு சம்பாதிப்பதற்கான கருவியாக மாற்றுகிறார்கள்.

வருமான பன்முகத்தன்மை?

நடுத்தர வர்க்கத்தினர் பொதுவாக ஒரே ஒருவரின் சம்பளத்தை மட்டும் பெரும்பாலும் நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளிப்பதே அவர்களுடைய வேலை தான். ஒரு வேலை, அந்த வேலை இழந்துவிட்டால், நிதி பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. ஆனால் பணக்காரர்கள் அப்படியில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் கொடுக்கும் அம்சங்களைக் உருவாக்கிக் கொள்கின்றனர். ஒன்று இல்லை என்றாலும், மற்றொன்று என ஈஸியாக நகர்கிறார்கள். இதனால் அவர்கள் எத்தகைய சூழலிலும் பாதிப்படைவதில்லை.

சொத்து மதிப்பு வளர்க்கிறதா?

பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் மதிப்பு குறையக் கூடிய பொருட்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள். தேவையே இல்லா விட்டாலும் புதிய கார், மின்னணு சாதனங்கள், டிரண்டுக்கு ஏற்ற ஆடைகள் என சமூக அந்தஸ்தை காட்டும் பொருட்களில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அவை ஒருபோதும் நிலையான சொத்துக்களாக இருக்காது என்பதை மறந்துவிடுகின்றனர். சொல்லப்போனால் காலப்போக்கில் அவற்றின் மதிப்பினை இழப்பதோடு, செலவையும் அதிகரிக்கும். ஆனால் பணக்காரர்களோ உரிமையாளர் ஆவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். லாபம் தரும் தொழில்கள், மதிப்பு உயரும் ரியல் எஸ்டேட், ராயல்டி தரும் சொத்துக்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கிறார்கள். அவரற்றின் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே செலவுகளுக்கு ஒதுக்கின்றனர்.

நிதி சிந்தனை எப்படி?

நடுத்தர வர்க்கத்தின் நிதித் திட்டம் பெரும்பாலும் மாதச் செலவுகளை சமாளிக்கும் வகையில் தான் இருக்கிறது. சொல்லபோனால் அவர்களின் பார்வை மிகக் குறுகியதாக இருக்கிறது. இது உடனடி தேவைகளை பூர்த்தி செய்தாலும், நீண்ட காலத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

ஆனால் பணக்காரர்கள் அப்படியில்லை. எதையும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கிறார்கள். கூட்டு வளர்ச்சியின் வலிமையை அறிந்தும், வரியைச் சேமிக்கும் திட்டங்கள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான சொத்துச் சேர்க்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்.

வளர்ச்சி எப்படி?

நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் தங்கள் நிதி நிலையை மாற்ற முடியாத ஒன்றாக நினைக்கிறார்கள். கல்வி, பின்னணி அல்லது சூழ்நிலைகளால் தங்கள் வருமானம் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறார்கள். இது புதிய திறன்களை கற்க விடாமல் அவர்களை தடுக்கிறது. ஆனால் பணக்காரர்கள் அப்படியில்லை. எப்போதும் தங்களை வளர்த்து கொள்கிறார்கள். பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு தொடர் கற்றலாக நினைக்கிறார்கள். தொடர்ந்து புதிய திறன்களை கற்பது, தொழில்முறை உறவுகளை வளர்ப்பது மற்றும் நிதி அறிவை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தோல்விகளை வெற்றிக்கு தேவையான கல்லாக பார்க்கிறார்கள். இந்த வளர்ச்சி மனநிலை அவர்களின் வருமானத்தையும் தொடர்ந்து அதிகரிக்க உதவுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+