இருந்தாலும் பணம்.. இறந்தாலும் பணம்.. எண்டோவ்மென்ட் பாலிசியின் சலுகை இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலரும் விருப்பமான பாலிசி என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி தான். ஏனெனில் நமக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் குடும்பத்துக்காவது நல்லது நடக்கணுமே என்பது தான் நம்மில் பலரின் எண்ணமாக இருக்கும்.

 

ஒரு வேளை எந்த அசாம்பாவிதமும் இல்லாவிட்டாலும், பாலிசி காலம் முடியுறப்போ கட்டுன பணமும் போனஸூம் சேர்ந்து கிடைக்கும் என்பதாலேயே இது சிறந்த ஆப்சனாக கருதப்படுகிறது.

இதனாலேயே இந்த பாலிசியினை பலரும் தேர்தெடுக்கிறாங்க..சரி வாங்க பார்ப்போம் மற்ற விவரங்கள.

எண்டோவ்மென்ட் பாலிசி இதுக்காகத் தான்

எண்டோவ்மென்ட் பாலிசி இதுக்காகத் தான்

ஆக எண்டோவ்மென்ட் பாலிசியை பொறுத்தவரையில் இறந்தாலும் பணம், இருந்தாலும் பணம் தான். ஆனா என்ன டெர்ம் பாலிசியை விட இதில் கொஞ்சம் பிரீமியம் அதிகம். இந்த பாலிசியில் பாலிசி எடுக்கறவரோட வயது, பாலிசி தொகை, பிரிமியம் கட்டுற காலம், வருமானத்தோட அளவு என இதையெல்லாம் பொறுத்து பாலிசியோட பிரீமியமும் அதிகரிக்கும்.

பிரிமீயம் எவ்வளவு?

பிரிமீயம் எவ்வளவு?

உதாரணத்துக்கு ராஜா என்பவர் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கிறார் என்றால், அவர் மொத்தம் 4 லட்சம் ரூபாய் செலுத்தி இருப்பார். எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியம் கட்டிய 20 ஆண்டுகளுக்கு பிறகு அதை சுமார் இருமடங்காக அதாவது 8 லட்சம் ரூபாய் வரை பெற வாய்ப்புள்ளது.

இறந்தாலும் க்ளைம் செய்ய முடியும்
 

இறந்தாலும் க்ளைம் செய்ய முடியும்

ஒரு வேளை பாலிசிதாரர் இடைப்பட்ட காலத்தில் இறந்துவிட்டாலும், காப்பீட்டுத் தொகை பாலிசிதாரரின் குடும்பத்துக்கு கிடைக்கும். இதே பாலிசி தாரர் உயிருடன் இருந்தால் அவரது முதலீடும், அதுனுடன் சேர்த்து அதன் மூலம் கிடைத்த வருவாயும் பாலிசி தாரருக்கு கிடைக்கும். இதனால் தான் எண்டோவ்மென்ட் பாலிசியை மக்கள் பெரிதும் தேர்தெடுகிறார்கள்.

யாருக்கு இந்த பாலிசி

யாருக்கு இந்த பாலிசி

ஆனால் எண்டோவ்மென்ட் பாலிசியினை பொறுத்தவரையில் வழக்கமான வருமானம் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மொத்த தொகையும் தேவைப்படும் நபர்கள் இந்த திட்டத்தினை தேர்தெடுக்கலாம் என்கிறார்கள் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.

இவர்களுக்கு உகந்தது

இவர்களுக்கு உகந்தது

மேலும் ஒவ்வொருவருக்கும் போர்ட்போலியோவின் ஒரு பகுதியாக சில ஆபத்து இல்லாத உறுதியான ஆபத்து இல்லாத முதலீடுகள் அவசியம் தேவைப்படுகின்றன. ஆக அப்படி நினைப்பவர்களுக்கு எண்டோவ்மென்ட் பாலிசி சிறந்த வாய்ப்பாக அமையும்.

இது எல்லாம் சிறந்த பாலிசி

இது எல்லாம் சிறந்த பாலிசி

இந்த எண்டோவ்மென்ட் பாலிசியில் சில சிறந்த பாலிசிகள் இதோ..

BSLI vision endowment plan

AVIVA Dhan nirman endownment policy

Bajaj Allianz endowment policy

Bharti AXA life elite advantage plan

Jeevan nivesh plan

இந்த பாலிசிகள் பாலிசி பஜார் பரிந்துரைக்கபப்ட்ட பாலிசிகளாகும். இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள பாலிசிபஜார் இணையதளத்தில் (https://www.policybazaar.com/endowment-policy/) தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the benefits of e endowment policy? Pls check other details

Endowment plan offers both the death and the maturity benefits. Also its offers an added advantage as it provides the sum assured as the maturity benefit.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X