ஓய்வு பெற்றவர்களுக்கான சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எவை?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது மட்டுமின்றி மற்ற முதலீடுகளை விட அதிக வருவாய் தரக் கூடியது என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

அதன் காரணமாகத்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதை சிறு வயதிலிருந்தே துவக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் ஓய்வு பெற்றவர்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? அவர்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு ஏற்ற திட்டங்கள் என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒருவர் சம்பாதிக்க தொடங்கிய உடன் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அப்போது தான் அவர் ஓய்வு பெறும் போது ஒரு மிகப்பெரிய தொகை அவரது கைக்கு வரும் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தொகையை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய நினைத்தால் அவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா? என்ற கேள்வி அனைவருக்கு எழும்.

ஓய்வு பெற்றவர்கள்

ஓய்வு பெற்றவர்கள்

பொதுவாக ஓய்வு பெற்றவர்கள் பிக்சட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் காப்பீடு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதில் வழக்கமாக உள்ளனர். ஆனால் திடீரென அவசர தேவை காரணமாக அவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் மேற்கண்ட முதலீட்டிலிருந்து பணத்தை எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம். அதனால் அவர்கள் ஒரு சில குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்வு செய்தால் ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட அதிக வருவாய் தருவதோடு மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து பணத்தை திரும்ப எடுப்பதும் மிகவும் சுலபமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிஸ்டமேட்டிக் வித்ட்ரா ஃபண்ட்

சிஸ்டமேட்டிக் வித்ட்ரா ஃபண்ட்

ஓய்வு பெற்றவர்கள் மியூச்சுவல் பண்டில் இருக்கும் ஏற்ற இறக்கத்திற்கு அஞ்சியே அவர்கள் அதிலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஏற்ற இறக்கத்தை விரும்பாதவர்கள் SWP என்று கூறப்படும் சிஸ்டமேட்டிக் வித்ட்ரா ஃபண்டில் (systematic withdrawal plan) முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டில் அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானம் பெற்றுத்தரும்.

பாதுகாப்பானது

பாதுகாப்பானது

ஈக்விட்டி ஃபண்டுகளில், டெஃப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை விட ஒப்பீட்டளவில் சிஸ்டமேட்டிக் வித்ட்ரா ஃபண்ட் மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் வங்கிகள், அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், பாண்டுகள் ஆகிவற்றில் தான் சிஸ்டமேட்டிக் வித்ட்ரா ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். எனவே நமது முதலீடு பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் நமக்கு வருமானம் கிடைக்கும்.

மொத்த முதலீடு

மொத்த முதலீடு

சிஸ்டமேட்டிக் வித்ட்ரா ஃபண்ட் என்பது மாதந்தோறும் பணம் எடுத்தல் திட்டம் என்பதால் ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய தொகையை மொத்தமாக முதலீடு செய்துவிட்டு அதன் பின்னர் மாதம் மாதம் அவர் ஒரு தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய மொத்த முதலீடு குறையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிதி ஆலோசகர்கள்

நிதி ஆலோசகர்கள்

ஓய்வு பெற்ற நபர்கள் தங்களது நிதி திட்டமிடல்களை நிதி ஆலோசகர்களின் கலந்து ஆலோசித்து எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+