டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் தற்போது இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாடு என்பதாலும் அரசு உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிவிப்பதாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
அவ்வாறு இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
1. சொத்து வாங்குவதற்கு முன்பாக வெளிநாட்டு பண பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டிகள் குறித்து அடிப்படை புரிதலை கொண்டிருக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்திய முதலீட்டை வெளிநாட்டு பண பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் தான் மேற்பார்வை இடுகிறது. இந்தியாவில் கமர்சியல் ரீதியிலான முதலீடுகள் மற்றும் குடியிருப்பு ரீதியிலான சொத்துக்களை வாங்குவது எளிது. இருந்தாலும் விவசாய நிலம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீடு வாங்கும் போது அது ரேராவில் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்றுள்ளதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சொத்து வாங்கும் போது பான் கார்டு , வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வழங்குவது அவசியம். இந்திய அரசு சட்டங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி காட்டும் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மட்டுமே சொத்துக்களை வாங்க வேண்டும்.
3. சில வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் சொத்து வாங்குவதற்கு கடன்களையும் வழங்குகின்றன. சொத்தின் சிலையில் 80 முதல் 85 சதவீதம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன. கடனை திரும்ப செலுத்துவதற்கு 10 முதல் 20 ஆண்டுகாலம் வரை வழங்கப்படுகிறது. இந்திய வங்கிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கடன் வழங்க சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன.
4. வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன்பு விதிமுறைகளையும் வட்டி விதிங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. இது தவிர வங்கிகள் உங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் பான் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும் என்பதால் அவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
5. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்து வாங்கும் போது இந்தியாவில் அதற்கு பவர் ஆஃப் அட்டர்னியை வழங்குவது முக்கியம். ஏனெனில் அவர்கள் இந்தியாவில் நேரடியாக இருந்து இந்த சொத்துக்களை மேலாண்மை செய்ய முடியாத சமயங்களில் யாரிடம் பவர் ஆஃப் அட்டார்னி இருக்கிறதோ அவர்கள் பார்த்து கொள்வார்கள்.
6. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய குடிமகனிடமிருந்து சொத்துக்களை வாங்கும் போது அந்த சொத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 1 சதவீதம் தொகை டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்யப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் டிடிஎஸ் விலக்கு கோரி விண்ணப்பம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிடிஎஸ் தவிர வேறு எந்த ஒரு நேரடி வரியும் விதிக்கப்படுவது கிடையாது.


Click it and Unblock the Notifications