நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை முதலீடு செய்வதே எதிர்காலத்தில் நமக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பதற்காகத்தான்.
ஆனால் தவறான திட்டங்களில் முதலீடு செய்தால் நமக்கு வருவாய் கிடைக்காது என்பது மட்டுமின்றி நமது முதலீடும் முற்றிலும் இழக்கப்படும் அபாயம் இருப்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்களில் முதலீடு செய்யும் தவறை முதலீட்டாளர்கள் செய்யக்கூடாது என நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள்
அதிக ரிஸ்க் இல்லாமல் மார்க்கெட்டில் வழக்கத்தை விட அதிக வருவாய் கிடைக்கும் ஸ்கீம்கள் என உத்தரவாதம் தரப்பட்டு முதலீட்டாளர்களை ஆசை வார்த்தைகள் கூறி இழுக்கும் திட்டங்கள் அதிகம் உள்ளன. இது போன்ற அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
ரிஸ்க் இல்லாமல் அதிக வருமானமா?
அதிக ரிஸ்க் இல்லாமல் அதிக வருமானம் கிடைக்கும் டெபாசிட் திட்டங்கள் என விளம்பரம் செய்யப்பட்டால் அந்த திட்டங்களில் இருந்து விலகி இருப்பதே நல்லது. அதிக ரிஸ்க் இல்லாமல் அதிக வருவாய் கொடுக்கும் திட்டம் உலகில் எதுவுமே இல்லை என்பதும் அதிக ரிஸ்க் எடுத்தால் மட்டுமே அதிக வருவாய் கிடைக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை விஷயம் ஆகும்.
தடை
கடந்த 2019ஆம் ஆண்டு அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்களை தடைசெய்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த சட்டம் அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்களை பட்டியலிட்டு முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. மிகக் குறைந்த ரிஸ்க் அதிகம் வருவாய் கொடுக்கும் திட்டம் என நம்ப வைக்கும் திட்டங்களில் இருந்து இந்த சட்டம் முதலீட்டாளர்களை பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசை வார்த்தை
சிறிய முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் உருவாகி வருகின்றன. தனிநபர்கள் அல்லது ஒரு குழுவினரோ அல்லது ஒரு நிறுவனங்களோ இந்த திட்டங்களை அதிக வருவாய் தருவதாக ஆசைக்காட்டி அதன்பின் முதலீட்டு பணத்தை ஏமாற்றும் நிலைமைதான் உள்ளது என்பதும் இதில் பலர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டது.
தவிர்ப்பது நல்லது
முதலீட்டுக்கு அதிக வருவாய் கொடுப்பதாக விளம்பரப்படுத்துபவர்கள் உறுதி அளித்த தொகையை சரியாக வழங்க வாய்ப்பே இல்லை என்பதும் எனவே இதுபோன்ற ஸ்கீம்களில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி அனுமதி
முதலீடு செய்வதற்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி, செபி, மத்திய மாநில அரசின் அனுமதி ஆகியவற்றை அறிந்து தான் முதலீடு செய்யவேண்டும். அரசாங்க அமைப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவற்றில் பதிவு செய்யப்படாத எந்த ஸ்கீம்களிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது.


Click it and Unblock the Notifications