ரூ.1 கோடி ஹோம் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை? இது இருந்தால் தான் கடன் கிடைக்கும்!

சில காலமாகவே சொத்து விலை விண்ணை எட்டி வருகிறது. ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றாலும், அதற்கு கையில் இருக்கும் பணம் போதாமல் இருக்கிறது. இந்தச் சூழலில் பலரும் ஹோம் லோன்களைத் தான் நாடுகின்றனர். அதுவும் மெட்ரோ நகரங்களாக இருந்தால் ரூ.1 கோடிக்கும் கீழான சொத்துக்களே இல்லை. நீங்கள் ரூ.1 கோடி லோன் பெறுவதற்கு சில தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்று கிரெடிட் ஸ்கோர்.

எப்பொழுதெல்லாம் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கிறோமோ? அப்பொழுதெல்லாம் வங்கிகள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைத் தான் சரி பார்க்கும். இந்தப் பதிவில் ரூ.1 கோடி ஹோம் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை? என்பது குறித்து தான் பார்க்கவுள்ளோம்.

ரூ.1 கோடி ஹோம் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை? இது இருந்தால் தான் கடன் கிடைக்கும்!

ரூ.1 கோடி ஹோம் லோன் பெற எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் தேவை?: 750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால்தான் ரூ.1 கோடி கடன் பெற முடியும். கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை இந்த கிரெடிட் ஸ்கோர் தான் மேம்படுத்தும். கிரெடிட் ஸ்கோர் சரியாக இருந்தால் சிறந்த வட்டி விகிதங்களில் கடன் பெறலாம். அது மட்டுமின்றி உங்களுடைய வருமானம், வேலையின் நிலைத் தன்மை, ஏற்கனவே பெற்ற கடன்கள், முன்பணம் செலுத்தும் திறன் ஆகியவற்றையும் மதிப்பீட்டு தான் இந்தத் தொகையை வழங்குவார்கள். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதிக வட்டி செலுத்த வேண்டி வரலாம்.

கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்தைக் கொண்ட எண்ணாகும். இந்த ஒரு எண்ணை தான் நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது வங்கிகள் சரிபார்க்கும். அதை வைத்தே நீங்கள் ஏற்கனவே எவ்வளவு கடன் பெற்றீர்கள்? அதை சரிவர செலுத்தி இருக்கிறீர்களா? ஏதேனும் தவணையைத் தவறவிட்டீர்களா? என அனைத்து விவரங்களையும் வங்கிகள் தெரிந்து கொண்டு விடும்.

பெரும்பாலான இந்தியக் கடன் வழங்குனர்கள் 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோரைத் தான் சிறந்த ஸ்கோராக கருதுகின்றனர். பொதுவாக கிரெடிட் ஸ்கோர் 650 முதல் 900 வரையில் இருக்கும். உதாரணமாக ஐசிஐசிஐ பேங்க் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிறுவனங்கள் 750-க்கு மேல் கிரெடிட் ஸ்கோரை எதிர்பார்க்கின்றனர்.

Take a Poll

கிரெடிட் ஸ்கோர் 700-க்கும் குறைவாக இருந்தால் கடன் ஒப்புதல்களில் கடுமையான சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம் அல்லது கடுமையான நிபந்தனைகளுக்கும் இவை வழிவகுக்கும். சில நேரங்களில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

அதிக கிரெடிட் ஸ்கோர் இருப்பது விரைவான கடன் ஒப்புதலுக்கு உதவி செய்யும். அது மட்டுமின்றி வட்டி விகிதமும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக 750 மதிப்பெண்களுக்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் விண்ணப்பதாரர் 8.5 சதவீத வட்டியிலேயே கடன் பெற முடியும். இதற்கு நேர்மாறாக 550 முதல் 649 வரை ஒருவர் கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் அவர் 9.65 சதவீத வட்டியில் தான் கடன் பெற முடியும். இது ஒரு உதாரணத்திற்காக கூறப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் இதைத் தாண்டியும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். 1 சதவீத வட்டி வேறுபாடு கூட நீங்கள் வட்டி செலுத்தும் போது அதிக சுமையை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிரெடிட் ஸ்கோரைத் தாண்டி என்னென்ன தகுதி வேண்டும்?: கிரெடிட் ஸ்கோரைத் தாண்டி சில விஷயங்களை வங்கிகள் எதிர்பார்க்கும். உதாரணமாக ரூ.1 கோடி லோன் பெற வேண்டுமானால் அதற்கு உங்களுடைய மாத வருமானம் ரூ.1,20,000 வரையில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரருக்கு 70 வயது ஆவதற்குள் கடன் காலம் முடிந்து விட வேண்டும். ஏதேனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் அந்த வணிகத்தின் வரலாறு போன்றவற்றையும் வங்கிகள் சரி பார்க்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+