EPF (ஊழியர் வருங்கால நிதி) என்பது, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நமக்கு ஓய்வுக்குப் பின் உதவும் ஒரு பாதுகாப்பு சேமிப்பு. நாமும் நம்முடைய நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் ஒரு சதவிகிதம் சம்பளத்திலிருந்து PF-க்கு கட்டணம் செலுத்துகிறோம். அதற்கேற்ப, ஆண்டுதோறும் நமக்கு அரசு வட்டி அளிக்கிறது. ஆனால் சிலருக்கு ஒரு சந்தேகம் என் PF கணக்கில் வட்டி இன்னும் சேரவில்லை. எனக்கு நஷ்டமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் அது உடனே நம்ம PF கணக்கில் சேராது. பொதுவாக ஜூன் மாதத்துக்குள் EPFO (ஊழியர் நிதி நிறுவனம்) அதை கணக்கில் சேர்க்கும். தாமதம் நடந்தாலும், முழு வட்டியும் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் PF கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால், அதை அடிப்படையாக வைத்து முழு ஆண்டுக்கான வட்டி கணக்கிடப்படுகிறது. அது உங்கள் கணக்கில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரலாம். ஆனால் அதுவரை இருக்கும் தொகையையும் வைத்து EPFO வட்டி கணக்கிடும். எனவே ஒரு ரூபாய் கூட குறைவாக நீங்கள் பெற மாட்டீர்கள்.

EPFO ஒரு அதிகாரப்பூர்வ தகவலில், வட்டி முழுமையாக செலுத்தப்படும், தாமதம் நஷ்டமல்ல என்று அறிவித்துள்ளது. நீங்கள் உங்கள் PF கணக்கை வீட்டிலிருந்தே பார்க்கலாம், உங்கள் மொபைலில் "UMANG" appஐ தரவிறக்கம் செய்யவும். "EPFO" என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். "View Passbook" என்பதை கிளிக் செய்யவும். உங்கள் UAN எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். பின்னர் உங்கள் PF இருப்பு, வட்டி விவரம் தெரியும்.
இணையதளம் மூலமாகவும் பார்க்கலாம், epfindia.gov.in என்ற இணையதளத்தில் Member Passbook பகுதி கிளிக் செய்யவும். உங்கள் UAN, பாஸ்வேர்ட் உள்ளிட்டவுடன் உங்கள் PF பாஸ்புக் தெரியும். உங்கள் PF-ல் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 9966044425-க்கு மிஸ்டு கால் கொடுக்கவும். சில விநாடிகளில் உங்கள் PF இருப்பு SMS-ல் வரும். உங்கள் மொபைலில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு "EPFOHO UAN TML" என SMS அனுப்பவும். TML என்றால் தமிழ். உங்கள் PF நிலை, பணியாளர், நிறுவனம் செலுத்திய தொகை, வட்டி போன்ற தகவல்கள் வரும்.
EPFO ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் உள்ள தொகையை வைத்து வட்டி கணக்கிடுகிறது. ஆனால் முழு ஆண்டுக்குப் பிறகு (மார்ச் முடிவில்) மட்டுமே அந்த தொகை ஒருமுறை சேர்க்கப்படுகிறது. வட்டி கணக்கில் வந்து கொண்டே இருக்கும். நேரத்தில் உங்கள் கணக்கில் தெரியாமல் இருந்தாலும், அதற்கான வட்டி உங்களுக்கு மறக்காமல் சேர்க்கப்படும்.
EPFO ஒரு பெரிய அமைப்பு. கோடிக்கணக்கான கணக்குகள் இருக்கின்றன. எல்லா உறுப்பினருக்கும் சரியாக கணக்கிட வேண்டிய நேரம் எடுக்கிறது. அதனால் தான் வட்டி சிறிது தாமதமாக PF கணக்கில் சேர்கிறது. ஆனால் அது யாருக்கும் நஷ்டம் இல்லை.
PF குறித்து கவலை வேண்டாம். உங்களுடைய PF-இல் வரும் தொகையும், அதில் கிடைக்கும் வட்டியும் அரசு அமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. வட்டி தாமதமாக வரலாம் ஆனால் அது முழுமையாக கிடைக்கும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications