திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் பிரிந்த பின்னர் அவர்கள் ஆளாக நேரிடும் சங்கடங்கள் நிதிப் பிரச்னைகள் மிகவும் கஷ்டமாகும். இன்ஸ்சூரன்ஸ் பாலிசியில் விவாகரத்து காரணமாக ஏற்படக்கூடிய பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இரண்டு தனித்தனி பாலிசியை வாங்குவதற்கு பதிலாக ஒரே கூட்டு பாலிசியை வாங்கியிருந்தால் செலவு மிச்சம். அத்தோடு பாலிஸியை நிர்வகிப்பதும் எளிதாகும். இந்தியாவில் திருமணமானவர்கள் தங்களது ஜோடியை தனிப்பட்ட பாலிசியில் சேர்க்கவோ அல்லது சேர்க்காமல் இருக்கவோ முடியும்.

மேலும், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் விவாகரத்து ஆனவர்களின் பாலிஸியை எப்படி முடிவு செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள வலியுறுத்துவர். யாராவது ஒருவரை விலக்கவோ அல்லது மற்றவரை முழுவதும் ஒதுக்கவோ முடியும்.
1874 ஆம் ஆண்டு திருமணமான பெண்கள் சொத்துரிமை சட்டத்தின்படி திருமணமான பெண்களின் சொத்துரிமையை பாதுகாக்கிறது. காலங்காலமாக பெண்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைக் களைவதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
திருமணமான பெண்கள் தங்களது உரிமைகளை சுயமாகத் தீர்மானிப்பதற்காகவும் கணவர்களின் ஆதிக்கத்திலிருந்து வெளிப்படவும் பயன்படுகிறது. இந்த பாலிஸிகள் மூலம் கணவர் ஒரு பாலிஸியை எடுத்துக் கொண்டு அதில் பயனாளராக மனைவியை சேர்க்க முடியும்.
இருப்பினும் விவாகரத்துக்குப் பின்னும் மனைவி அந்த பலனை அனுபவிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.
டெர்ம் பாலிஸிகளில் மரணத்துக்கான இழப்பீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் மனைவியை வாரிசாகக் குறிப்பிட்டிருந்தால் அதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
விவாகரத்தால் பாலிஸியில் மாற்றம் இருக்காது. மணமான பெண்கள் சொத்துரிமை சட்டத்தின்கீழ் டெர்ம் பாலிஸியை எடுத்திருந்தால் மனைவியை பலன்தாரராக சேர்க்கலாம்.

திருமணமானவர்கள் ஜோடியாக லைப் இன்சூரன்ஸ் பாலிசிஎடுப்பதே புத்திசாலித்தனமாகும். பாலிசிபிரீமியம் தனித்தனியாக செலுத்தவேண்டிய அவசியம் இருக்காது. பலன் இருவருக்குமே சேரும். கணவர் இறந்துவிட்டால் தானாகவே மனைவிக்கு பாலிஸியின் பலன் வழங்கப்படும்.
ஜோடியாக எடுக்கப்படும் பாலிஸியில் மனைவியை வாரிசாகக் குறிப்பிட்டிருந்தால் விவாகரத்து ஆனாலும் மனைவிக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.
விவாகரத்து காரணமாக கணவரை பிரிந்த பெண்கள் பணத்துக்காக படும் பாடு சொல்லி மாளாது. எனவே எப்போதும் பாலிஸியில் மனைவியின் பெயரை கணவர் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மனைவிக்கு உரிய இழப்பீடு கிடைக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications