நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் "கிரெடிட் ஸ்கோர்" என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். கடன் பெறுவதானாலும் சரி.. கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தாலும் சரி கிரெடிட் ஸ்கோரை வைத்து தான் கடன் வழங்குனர்கள் உங்களுடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்வார்கள். கடன் பெறுவதற்கு நீங்கள் தகுதியுள்ளவரா? என்பதைத் தீர்மானிப்பதே இந்த கிரெடிட் ஸ்கோர் தான். எப்படி இந்த கிரெடிட் ஸ்கோரை சீராக பராமரிப்பது? என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண்ணாகும். இது 300 முதல் 850 வரை இருக்கும். இந்த கிரெடிட் ஸ்கோர் நீங்கள் கடன் பெற்று எவ்வளவு சிறப்புடன் செயல்பட்டு இருக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்தே அமையும்.

அதாவது வாங்கிய கடனுக்கான EMI தொகையை சரியான நேரத்தில் செலுத்தி இருக்கிறீர்களா? எந்த தேதியில் கடன் செலுத்தி இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தாமதமாக செலுத்தியிருக்கிறீர்கள்? எத்தனை முறை தவணையை தவறவிட்டிருக்கிறீர்கள்? என்பதை பொறுத்தே இந்த கிரெடிட் ஸ்கோர் அமையும்.
நீங்கள் எந்த கடன் பெற்றாலும் சரி அவற்றை சரியாக திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருக்கும். அதையும் மீறி உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் குறைந்தால் நீங்கள் வேறு யாருக்கேனும் லோன் பெறுவதற்கு கையெழுத்துப் போட்டு உள்ளீர்களா? என்பதை சரி பார்க்க வேண்டும்.
எனவே கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். 600-க்கும் கீழ் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசிக்கும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது?:
சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள்: உங்கள் மதிப்பெண்ணில் எதிர்மறையான தாக்கங்களைத் தவிர்க்க, உடனடியாக பில்களை செலுத்துவதை உறுதிசெய்யவும். கிரெடிட் கார்டு கடன்கள் முதல் பர்சனல் லோன் வரை அனைத்து கடன்களையும் சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதுதான் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதில் முதல் படி.
கிரெடிட் கார்டு நிலுவைகளை நிர்வகித்தல்: கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை சரியாக பராமரிக்கவும். எந்த கிரெடிட் கார்டு பெற்றாலும் சரி.. இந்த விகிதத்திற்கு கீழ் செலவு செய்தால் வங்கிகள் நீங்கள் பொறுப்பில்லாமல் செலவு செய்பவர் என்று முடிவெடுத்துவிடும். இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் வெகுவாக குறையும். எனவே இந்த கிரெடிட் கார்டு பயன்பாட்டு விகிதத்தை சரியாக பராமரிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
புதிதாக கடன் பெற விண்ணப்பிப்பதை தற்காலிகமாக குறைக்கவும்: கிரெடிட் ஸ்கோர் குறைந்து கொண்டே வந்தால் தற்காலிகமாக புதிதாக கடன் பெற விண்ணப்பிப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சிலர் கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டே இன்னொரு கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பார்கள். இதுபோன்ற தவறுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும்.
உங்கள் கிரெடிட் அறிக்கையை கண்காணிக்கவும்: பிழைகள் மற்றும் தவறுகளை உடனுக்குடன் தவறாமல் சரிபார்க்கவும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமான காரணத்தினால், இன்றைய சூழலில் நிறைய மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே உங்களுடைய விவரங்களை தவறாக பயன்படுத்துகின்றனரா? என்பதை தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். உங்களுடைய கிரெடிட் கார்டு அறிக்கையை அடிக்கடி சரி பார்ப்பது நல்லது. அதில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனை தென்பட்டால் உடனடியாக புகார் அளிக்கவும்.
பொறுப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவும்: கிரெடிட் கார்டு கடன்களுக்கு பொதுவாக அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இது தெரிந்தும் பலர் கிரெடிட் கார்டுகளைப் பெற்று அதை தேவையில்லாமல் செலவு செய்கின்றனர். இதுவும் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு வழிவகுக்கும்.
கிரெடிட் கார்டுகளை வைத்து தேவையில்லாமல் செலவு செய்வதனால் பில் செலுத்தும் போது சிரமப்படுகின்றனர். இதுவும் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கு வழிவகுக்கும். எனவே கிரெடிட் கார்டு கடன்களுக்கு அதிக வட்டி என்பதை தெரிந்து கொண்டு ஒவ்வொரு முறையும் ஸ்வைப் செய்யுங்கள்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications