2025 ஆம் ஆண்டில் வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது .சென்னை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்திலேயே ஒரு கிராம் வெள்ளியின் விலை 226 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய் கடந்துவிட்டது.
வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்து வருகிறது. இதனை சரியாக கனித்து இந்த ஆண்டில் சில்வர் ஈடிஎஃப்களில் முதலீடு செய்தவர்கள் அனைவருமே 100% பார்த்திருக்கிறார்கள் . இந்தியாவின் முன்னணி முதலீட்டாளர்களுள் ஒருவராக கருதப்படக் கூடிய விஜய் கேடியா இந்த ஆண்டின் வெள்ளியில் தான் செய்த முதலீடு தனக்கு 100% லாபம் தந்ததாக கூறியிருக்கிறார் .

வெள்ளியில் முதலீடு என்றால் வெள்ளி பொருட்களாகவோ ,நகைகளாகவோ ,நாணயங்களாகவோ அல்லது வெள்ளி கட்டிகளாகவும் வாங்கி வைப்பது கிடையாது. சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் செய்த முதலீடு தான் அவருக்கு பெரிய லாபத்தை தந்திருக்கிறது .இதற்காக அவர் பெரிய ஆராய்ச்சிகள் எதையும் செய்யவில்லை . தன்னுடைய டிமேட் கணக்கில் சில்வர் ஈடிஎஃப் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் பணத்தை போட்டு வைத்தார். அது இந்த ஆண்டு இறுதியில் 100% அதாவது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது இரண்டு லட்சம் ரூபாய் என லாபம் தந்துள்ளது.
எப்படி கோல்டு ஈடிஎஃப்கள் இருக்கின்றனவோ அப்படி தான் இந்தியாவில் சில்வர் ஈடிஎஃப்களும் இருக்கின்றன. வெள்ளியின் விலையை கண்காணித்து பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படக்கூடிய ஒரு பரஸ்பர நிதி என இந்த ஈடிஎஃப் திட்டங்களை வைத்துக் கொள்ளலாம் . நாம் வெள்ளி நாணயங்களோ , கட்டிகளோ வாங்க மாட்டோம் அதற்கு பதிலாக யூனிட்டுகளாக வாங்குவோம் .

சில்வர் ஈடிஎஃப்பில் ஒவ்வொரு யூனிட்டும் வெள்ளிக்கு நிகரான மதிப்பை குறிக்கிறது . சில்வர் ஈடிஎஃப் என்பது டிஜிட்டல் முறையில் வாங்கும் வெள்ளி ஆனால் இதனை நாம் தொட்டு பார்க்கவோ பயன்படுத்தவோ முடியாது. ஆனால் வெள்ளி விலை உயர உயர இதுவும் உயர்ந்து நமக்கு லாபத்தை தரும்.
வெள்ளியின் விலை உயரும் போது இந்த யூனிட்டின் மதிப்பும் உயரும் . சில்வர் ஈடிஎஃப் திட்டங்களிலும் நாம் அச்சமின்றி முதலீடு செய்யலாம் . ஏனெனில் இது செபியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முதலீட்டு திட்டம் ஆகும் .இது மட்டும் இல்லாமல் உங்களுக்கு ஒரு டீமேட் கணக்கு இருந்தாலே எளிதாக பங்குச்சந்தை நடைபெறும் நேரங்களில் சில்வர் ஈடிஎஃபில் பணத்தை போடலாம் அதனை விற்பனை செய்து உடனடியாக பணமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் 100 ரூபாய் மதிப்புள்ள 100 யூனிட்களை 10000 ரூபாய் செலுத்தி சில்வர் ஈடிஎஃப்பில் வாங்கி இருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 20000 ரூபாய். இந்த ஆண்டில் மட்டும் சில்வர் ஈடிஎப்கள் 100% லாபம் தந்துள்ளன. எண்ணுபவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன வெள்ளியை பொருட்களாகவோ அல்லது நாணயங்களாக வாங்கும் போது கூடுதலாக சில 100 ரூபாய்களை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஈடிஎஃப்களில் 99 சதவீத பணம் உங்களுக்கான முதலீடாகவே இருக்கும்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஒரு டிமாண்ட் இருக்கக்கூடிய முதலீடாக சில்வர் ஈடிஎஃப் திட்டங்கள் மாறி இருக்கின்றன. பங்குச்சந்தை நடைபெறும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதனை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளலாம் . இதனை பாதுகாக்க வேண்டும் அதன் தூய்மை தன்மை குறித்து எல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை இந்தியாவில் Nippon India Silver ETF, ICICI Prudential Silver ETF, Aditya Birla Sun Life Silver ETF, HDFC Silver ETF, Kotak Silver ETF ஆகியவை புகழ்பெற்ற சில்வர் ஈடிஎஃப்களாக உள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications