வங்கிகளில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளில் பல்வேறு சிறப்பு வசதிகள் இருக்கின்றன. ஆனால் அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் நாம் அவற்றை பயன்படுத்துவதில்லை.
உங்களின் வங்கிக் கணக்கில் இந்த ஒரு செட்டிங்கை மாற்றிவிட்டால் வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு இரண்டு விதமான வட்டி கிடைக்கும். அது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்..

சேமிப்பு கணக்குகளில் நாம் வைத்திருக்கும் பணத்திற்கு வங்கிகள் 2.5% முதல் வட்டி வழங்குகின்றன. இதுவே அந்த பணத்தை எஃப்.டி எனப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் போட்டால் கூடுதல் வட்டி கிடைக்கும். இதற்கு நாம் வங்கிக்கு சென்று டெபாசிட் செய்ய வேண்டும், இல்லையெனில் வங்கி செயலி மூலம் செய்யலாம்.
உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணம் தானாகவே ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்யப்பட்டு உங்களுக்கு கூடுதல் வட்டி வருவாயை தந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வசதி தான் ஆட்டோ ஸ்வீப் (auto sweep).
உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு கூடுதல் வட்டி கிடைக்கச் செய்யும் ஒரு வசதி தான். பொதுவாக இது சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் இரண்டின் கலவை ஆகும்.
அதாவது உங்களின் சேமிப்பு கணக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு விடும். நீங்கள் சேமிப்பு கணக்கில் ஒரு தொகையை வரம்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதை விட அதிக தொகையை கணக்கில் வைத்திருந்தால் அது தானாகவே ஃபிக்ஸ்ட் டெபாசிட் கனக்கிற்கு சென்று விடும்.
சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு அதற்கான வட்டியும் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு சென்ற பணத்திற்கு அதற்கான வட்டியும் கிடைக்கும். இது தானாகவே நடக்கும் நீங்கள் எந்த ஒரு மெனக்கெடலும் எடுக்க வேண்டியதில்லை.
உதாரணமாக நீங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தேவையாக ரூ.10,000 என வரம்பு நிர்ணயம் செய்து கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் கணக்கில் 30,000 ரூபாய் பணம் இருக்கிறது. இப்போது தானாகவே மீதமுள்ள 20,000 ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சென்றுவிடும்.
அதற்கான வட்டி உங்களுக்கு கிடைக்கும். ஒரு வேளை சேமிப்பு கணக்கில் 10,000க்கு கீழ் பணம் குறைந்துவிட்டால் தானாகவே ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருந்து பணம் சேமிப்பு கணக்கிற்கு வந்துவிடும்.
ஆட்டோ ஸ்வீப் முறையில் நீங்கள் எஃப்.டி. கணக்கை தொடங்க வேண்டும், அல்லது நிறுத்த வேண்டும் என்ற வேலைகளே தேவையில்லை. அனைத்தும் தானாகவே நடக்கும். உங்கள் வங்கி செயலியில் லாகின் செய்து ஆன்லைனிலேயே இந்த வசதியை நீங்கள் ஆன் செய்து கொள்ளலாம்.
தற்போதைக்கு ஸ்டேட் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசி பேங்க் , ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை இந்த வசதியை வழங்குகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications