பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

பங்குச் சந்தை ஒரு கடல் போன்றது, எப்போது அலை உயரும், எப்போது குறையும் என்று சொல்ல முடியாது. ஆனால் பாண்ட் எனப்படும் பத்திர சந்தை (Bonds) என்பது ஒரு நிலையான தரை போன்றது. அதை அவ்வளவு எளிதில் யாரும் தகர்க்க முடியாது.

பத்திரங்கள் என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், நீங்கள் அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு பெரிய நிறுவனத்திற்கோ கடன் கொடுக்கிறீர்கள். அதற்கு பதிலாக அவர்கள் உங்களுக்கு உறுதியான வட்டி தருவதாகப் பத்திரம் எழுதி கொடுக்கிறார்கள். அங்கு உங்கள் அசல் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, குறிப்பிட்ட இடைவெளியில் வட்டியும் உங்கள் கைக்கு வந்து சேரும்.

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

பங்குச் சந்தை சரிந்தாலும், உங்கள் பத்திரங்களுக்கான வட்டி குறையாது.ஆக வருமானம் சற்று குறைவாக இருந்தாலும் சீராக இருக்கும். குறிப்பாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்தால், உங்கள் பணத்திற்கு 100% பாதுகாப்பு இருக்கும். பொதுவாக பத்திரங்களுக்கு வங்கி பிக்சட் டெபாசிட்களை விட, சற்று வட்டி அதிகமாக இருக்கும். பல கார்ப்பரேட் பத்திரங்கள் வட்டி விகிதமானது வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டை விட கூடுதல் வட்டி வழங்குகின்றன. அதோடு பத்திரங்களைப் பொறுத்த வரையில் பங்குகளைப் போல ஒரே நாளில் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. ஆக புதிய முதலீட்டாளர்கள், ஓய்வூதியதாரர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

புதியவர்கள் எப்படி முதலீடு செய்வது?
பத்திரங்களில் முதலீடு செய்ய இப்போது பெரிய பெரிய அலுவலகங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் மொபைல் மூலமாக கூட தொடங்கி கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் https://rbiretaildirect.org.in/#/ என்ற தளம் மூலமும் நேரடியாக அரசு பத்திரங்களை வாங்கலாம். இது மிக பாதுகாப்பான வழியாகவும் பார்க்கப்படுகிறது.

உங்களிடம் டீமேட் கணக்கு இருந்தால், முன்னணி தரகு நிறுவனங்கள், பத்திரங்களுக்கு என பல நம்பகமான தனி தளங்களும் உள்ளன. அவற்றின் மூலமாக கூட பத்திரங்கள் வாங்கலாம்.

உங்களால் நேரடியாக பத்திரம் வாங்க முடியவில்லை என்றால், பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். புதிய முதலீட்டாளர்களை பொறுத்த வரையில், பயத்தை போக்க முதலில் அரசு பத்திரங்களில் (G-Secs) சிறிய தொகையை முதலீடு செய்யலாம். அதன் பிறகு நிறுவன பத்திரங்களை வாங்க திட்டமிடலாம். எதை வாங்கினாலும் அதற்கு முன் அவற்றின் கிரெடிட் ரேட்டிங்ஸ் என்ன என்று பாருங்கள். அவற்றில் பாதுகாப்பானவற்றை தெரிந்து கொண்டு, அதன் பிறகு முதலீட்டை திட்டமிடுங்கள்.

பத்திர முதலீடு என்பது ஒரு பாதுகாப்பான பயணத்தை போன்றது தான். ஆனால் அந்த பயணத்தை தொடங்கும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ரிஸ்க் குறைவு என்பதால் கண்மூடித்தனமாக முதலீடு செய்யாமல், வட்டி விகிதம் எவ்வளவு, கடன் தரம், அதன் முதிர்வு காலம், வட்டி விகித தொடர்பு எப்படி, பணப்புழக்கம் எப்படி என பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இனி அடுத்தடுத்து வரும் பதிவுகளில் பத்திரம் சார்ந்த முழு அம்சங்களையும் தெரிந்து கொள்வோம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+