டெல்லி: CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் சிஐஐ (CII )எனப்படும் விலை பணவீக்க குறியீட்டினை வெளியிட்டுள்ளது. நாம் நீண்ட காலமாக கொண்டிருக்கும் சொத்து, பங்கு உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் போது நமக்கு விதிக்கப்படும் மூலதன ஆதாய வரியை குறைப்பதற்கான ஒரு குறியீடு தான் விலை பண வீக்க குறியீடு.
இதன் முக்கியத்துவம் என்ன?, இதைப் பற்றி ஏன் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நேரடி வரிகள் வாரியம் 2024- 25ஆம் நிதியாண்டுக்கான விலை பணவீக்க குறியீடு குறியீட்டை 363 என நிர்ணயம் செய்துள்ளது. பொதுவாக நாம் சில பொருட்களை வாங்கும் போது ஒரு விலை இருக்கும் அதனை விற்கும் போது வேறொரு விலை இருக்கும். சில பொருட்களின் விலை குறையும் சில பொருட்களின் விலை உயரும்.
உதாரணமாக இரு சக்கர வாகனம் நாம் வாங்கும் போது 1 லட்சம் ரூபாய் என்றால் அதனை விற்கும் போது தேய்மானம் போக நாம் பயன்படுத்திய ஆண்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு 1 லட்சத்திற்கும் கீழ் தான் விற்பனையாகும்.
இதுவே நாம் ஒரு நிலத்தை விற்பனை செய்கிறோம் என்றால், கண்டிப்பாக நாம் வாங்கியதை விட அதிக விலைக்கு தான் விற்பனையாகும்.
நாம் வாங்கிய ஒரு சொத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு வைத்து கொண்டு பின்னர் அதிக விலைக்கு விற்கும் போது, அரசு நமக்கு குறிப்பிட்ட தொகையை வரியாக விதிக்கும். இது நீண்ட கால மூலதன ஆதாய வரி என அழைக்கப்படுகிறது.
இந்த வரியை கணக்கீடு செய்வதற்கு உதவக் கூடிய ஒரு குறியீடு தான் விலை பணவீக்க குறியீடு. ஆண்டுதோறும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த குறியீட்டின் அளவை வெளியிடும். இந்த குறியீடு இல்லையெனில் நாம் பெரும் தொகையை அரசுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.
உதாரணம்: மணி என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஒரு நிலத்தை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். 2009ஆம் ஆண்டு இதனை 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். இதில் அவருக்கு கிடைத்த மூலதன ஆதாயம் 15 லட்சம் ரூபாய் ஆகும். இதில் 15 லட்சம் ரூபாய்க்கும் அரசு வரி கணக்கிடாது. இந்த இடத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பணவீக்க குறியீட்டை கொண்டு இதனை சமன் செய்ய வேண்டும்.
நிலம் வாங்கப்பட்ட ஆண்டில் விலை பணவீக்க குறியீடு 300.
நிலம் விற்கப்பட்ட ஆண்டில் விலை பணவீக்க குறியீடு 363.
எனில் இந்த சொத்துக்கு விலை பணவீக்க குறியீடு 363/300=1.21
இப்போது பணவீக்க குறியீட்டின் படி சொத்தின் மதிப்பு = 20,00,000 * 1.21 = 24,20,000
நீண்ட கால மூலதன ஆதாயம் = 35,00,000 - 24,20,000 = 10,80,000.
எனவே இந்த சொத்தில் 10.80 லட்சம் ரூபாய்க்கு தான் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இதில் அரசு விதிகளின் படி 10% அல்லது 20% என எது பொருந்துமோ அந்த விகிதத்தில் வரி வசூல் செய்யும்.
விலை பணவீக்க குறியீடு இல்லையெனில் மணி 15 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டி இருக்கும், ஆனால் தற்போது 10.80 லட்சம் ரூபாய் என குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications