பியூச்சர்ஸ் மற்றும் அப்ஷன்ஸ்-ஐ டெரிவேட்டிவ் டிரேடிங் என்றும் அழைக்கப்படும், ஒரு சொத்தின் அடிப்படை மதிப்பீட்டின் அடிப்படையில் இது டிரைவ் ஆகிவரும் காணத்தால் இதை டெரிவேட்டிவ் என அழைக்கப்படுக்கிறது.
பிற முதலீட்டுத் திட்டத்தில் இருப்பது போலவே பியூச்சர்ஸ் மற்றும் அப்ஷன்ஸ் டிரேடிங்-ல் பல நன்மைகளும், இடர்களும் உண்டு.
பியூச்சர்ஸ் என்றால் என்ன..? அதை எப்படி டிரேடிங் செய்வது..?
ஒரு நிறுவனத்தின் பங்குகள் அல்லது கமாடிட்டி-ஐ பியூச்சர்ஸ் கான்டிராக்ட் முறையில் ஒருவர் வாங்கினால், அதை அந்தக் கான்டிராக்ட் முடியும் நாட்களுக்குள் செட்டில் செய்துவிட வேண்டும். மறுபுறம் கான்டிராக்ட் முடியும் நாட்களுக்குள் இந்தக் கான்டிராக்ட்-ஐ விற்பனை செய்தவர்கள் இதைக் கட்டாயம் வாங்கியாக வேண்டும்.

உதாரணமாக ஒரு பங்கு 1000 ரூபாய் மதிப்புடன் A என்ற நிறுவனத்தின் பங்குகளைப் பியூச்சர்ஸ் கான்டிராக்ட் முறையில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். பொதுவாக யூச்சர்ஸ் கான்டிராக்ட் அதிக எண்ணிக்கையிலான பங்குகளைக் கொண்டு இருக்கும், அந்த வகையில் A நிறுவனத்தின் சுமார் 500 பங்குகளைச் சுமார் 5 லட்சம் ரூபாய்க்குப் பியூச்சர்ஸ் சந்தையில் விற்பனைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம்.
இந்த 5 லட்சம் ரூபாயை ஒரு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டியது இல்லை, விற்பனையாளர் இந்தக் கான்டிராக்ட்-க்கு மார்ஜின் அளவை வைத்திருப்பார்கள் 5%, 10%, 15%, 20% இப்படி விற்பனையாளர் மற்றும் பங்குகளின் ரிஸ்க் அளவு பொருத்து இந்த மார்ஜின் அளவு முடிவு செய்யப்படும்.
A நிறுவனத்தின் 500 பங்குகளைக் கொண்ட பியூச்சர்ஸ் கான்டிராக்ட் மதிப்பு 5,00,000 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் மார்ஜின் அளவு பொருத்து தொகையைச் செலுத்த வேண்டும். உதாரணமாக 10 சதவீதம் என்றால் 5,00,000 ரூபாய் மதிப்புடைய பங்குகளை வெறும் 50000 ரூபாய்க்கு வாங்க முடியும்.
இந்த நிலையில் நீங்கள் வாங்கிய பங்கு 1000 இருக்கும் பட்சத்தில் இக்குறிப்பிட்ட பியூச்சர்ஸ் கான்டிராக்ட் வர்த்தகக் காலத்தில் பங்கு விலை 1010 ரூபாய் வரையில் உயர்ந்தால் 500x10= 5000 ரூபாய் லாபம் கிடைக்கும். இதேபோல் 990 ரூபாய்க்கு சரிந்தால் 5000 ரூபாய் இழப்பு ஏற்படும்.
பியூச்சர்ஸ் கான்டிராக்ட் முடியும் நாட்களுக்குள் செட்டில் செய்துவிட வேண்டும் என்பதால் இக்குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே ஒரு பங்கின் உரிமையை நீங்கள் பெற முடியும், இதில் நஷ்டம் அடைகிறது இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வைத்து விற்பனை செய்யும் முறை இல்லை.
இதேவேளையில் A நிறுவனத்தின் பங்குகள் இக்குறிப்பிட்ட காலத்தில் சரியும் என நீங்கள் கணித்திருந்தால் பியூச்சர்ஸ் கான்டிராக்ட்-ஐ முதலில் விற்பனை செய்துவிட்டு விலை குறைந்த பின்பு வாங்கி லாபம் பார்க்கும் ஒரு வழி உண்டு. அதாவது 1000 ரூபாய் விலையில் இந்தப் பியூச்சர்ஸ் கான்டிராக்ட்-ஐ விற்பனை செய்து விட்டு 990 ரூபாய்க்கு வரும் போது வாங்கி 5000 ரூபாய் லாபம் பார்க்க முடியும், ஆனால் இந்தப் பங்கு 990க்குச் செல்லாமல் 1010 ரூபாய்க்குச் சென்றால் நஷ்டம் அடைய வேண்டியிருக்கும்.
கால் ஆப்ஷன் மூலம் வாங்குவது
XYZ என்னும் நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு இதன் தற்போதைய விலையான 2000 ரூபாயில் இருந்து கால் ஆப்ஷன் வாயிலாக 8 ரூபாய் வரையில் உயரும் எனக் கணித்து ப்ரீமியம் விலை கொடுத்து முதலீடு செய்யப்படும்.
இந்த நிலையில் XYZ நிறுவனத்தின் பங்கு விலை 2000 ரூபாய் விலையில் இருந்து சரிந்தால் நஷ்டத்தின் அளவு 8 ரூபாய் வரையில் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் பங்கு விலை 2010 ரூபாய் வரையில் உயர்ந்தால் 8 ரூபாயை மொத்தமாகப் பெற முடியும், கூடுதலாக உயர்ந்த 2 ரூபாய் கிடைக்காது.
கால் ஆப்ஷன் மூலம் விற்பது
இதே உதாரணத்தால் XYZ நிறுவனத்தின் 2000 ரூபாய் மதிப்பிலான பங்குகள் கால் ஆப்ஷன் வாயிலாக 8 ரூபாய் வரையில் சரியும் எனக் கணித்து விற்பனை செய்தால், ஒரு முதலீட்டாளர் 1992 ரூபாய்க்குக் கீழ் சரிந்தால் மட்டுமே நஷ்டம் எதிர்கொள்வார்.
புட் (PUT)ஆப்ஷன் மூலம் வாங்குவது
ஒரு பியூச்சர்ஸ் கான்டிராக்ட்-ன் முடியும் நாளில் கான்டிராக்ட்-ஐ வாங்கியவர் அதை விற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும்.
இதன் மூலம் விலை குறைந்தாலும் வாங்கிய விலைக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்கும்.
புட் (PUT)ஆப்ஷன் மூலம் விற்பனை
இப்போது நிப்டி 18500த்தில் புட் ஆப்ஷன் மூலஸம் 350 ப்ரீமியம் உடன் விற்பனை செய்யும் பட்சத்தில், 18500க்கு மேல் இருக்கும் வரையில் லாபமே, ஆனால் சரியும் பட்சத்தில் 18500-350 அதாவது 18150 புள்ளிகள் வரும் வரையில் ஒரு முதலீட்டாளர்களுக்கு ஜீரோ இழப்பு.
இப்படிப் பல வழிகளில் 5paisa மூலம் வர்த்தகம் செய்ய முடியும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications