பொதுவாக, பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்து, அதிக ரிஸ்க் எடுத்து, அதிக லாபம் பார்ப்பதை விட, மியூச்சுவல் ஃபண்ட்களில் மாதா மாதமோ அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையோ, முதலீடு செய்துவிட்டு, மிதமான லாபம் பார்க்க வழி வகுக்கும் ஈக்விட்டி மற்றும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி நாம் அறிவோம்.
அதே போல, ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளும் ஒன்று. இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஈக்விட்டி திட்டங்கள், கடன் திட்டங்கள் என கலந்து முதலீடு செய்வார்கள். ஒவ்வொரு வகையான ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இந்த கலவை விகிதம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக: செபி வழிகாட்டுதல் படி, கன்சர்வேட்டிங் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் வரும் பணத்தில் 10 - 25 சதவிகித பணத்தை ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்வார்கள். 75 - 90 சதவிகித பணத்தை கடன் திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.
இதையே பேலன்ஸ்டு ஹைப்ரிட் ஃபண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால், 40 - 60 சதவிகித பணத்தை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள். 40 - 60 சதவிகித பணத்தை கடன் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இப்படி ஒவ்வொரு ஃபண்டு வகைக்குத் தகுந்தாற் போல முதலீடு செய்யும் விகிதம் மாறுபடும்.
இப்போது ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள், கடந்த காலங்களில் என்ன வருமானம் கொடுத்து இருக்கின்றன, என்பதை கீழே அட்டவணையில் பார்க்கலாம். தற்போதைக்கு நஷ்டம் அதிகமாகத் தெரிந்தாலும் நீண்ட காலத்துக்கு நல்ல வருமானம் கொடுத்திருப்பதையும் பார்க்க முடியும். எனவே உங்களுக்கு சரிப்பட்டு வரும் என்றால், இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடுச் செய்யலாம்.
| கடந்த 10 ஆண்டுகளில் Hybrid மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| ஃபண்டுகளின் பெயர் | 2020-ம் ஆண்டு | 1 வருடம் | 3 வருடம் | 5 வருடம் | 10 வருடம் |
| Hybrid: Aggressive Hybrid | -23.83 | -21.32 | -3.75 | 0.87 | 6.88 |
| Hybrid: Balanced Hybrid | -19.77 | -16.82 | -2.40 | 1.40 | 6.00 |
| Hybrid: Dynamic Asset Allocation | -17.10 | -13.85 | -0.66 | 2.30 | 6.81 |
| Hybrid: Multi Asset Allocation | -17.35 | -13.57 | -0.94 | 2.29 | 4.94 |
| Hybrid: Equity Savings | -13.22 | -10.16 | -0.15 | 3.45 | -- |
| Hybrid: Conservative Hybrid | -7.98 | -4.72 | 1.97 | 4.39 | 6.94 |
| Hybrid: Arbitrage | 1.58 | 6.05 | 5.79 | 6.19 | 7.21 |
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications