மணி பேக் பாலிசி.. யாருக்கு பொருந்தும்.. மற்ற விவரங்கள் இதோ..!

பெரும்பாலோனோர் விரும்பும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் நாம் முதலீடு செய்த பணம் கிடைத்து விடும் என்பதாலேயே பெரும்பாலனோரின் ஆப்சனாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது சிறந்த சேமிப்பு திட்டமாகவும் சிலர் கருதுவர்.

இந்த மணி பேக் பாலிசியும் கிட்டதட்ட எண்டோவ்மென்ட் பாலிசி போல் தான். ஆனால் இதில் ஒரு சின்ன வித்தியாசம் என்னவெனில் பாலிசி காலம் முடிந்தால் தான் பணம் கிடைக்கு என்பதில்லை.

இடையேயும் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஆக இடையே பணம் தேவை என்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

மணி பேக் பாலிசி

மணி பேக் பாலிசி

பொதுவாக இந்த திட்டத்தில் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பாலிசி தொகையில் 15 சதவீதத்தினை கொடுக்கும். உதாரணத்துக்கு ஒருத்தர் 20 வருடத்துக்கு பாலிசி எடுக்கிறார் எனில் அவருக்கும், 5 மற்றும் 10, 15 ஆண்டுகளுக்கு ஓரு முறை பணம் கிடைக்கும். கடைசியாக 20-வது வருடம் மிச்சம் உள்ள தொகை, போனஸ் என அனைத்தும் சேர்த்து கொடுங்ப்பாங்க.

பிரீமியம் அதிகம்

பிரீமியம் அதிகம்

ஆனால் இந்த பாலிசிகளை ஆலோசகர்கள் பலர் இதனை பரிந்துரைப்பதே இல்லை. ஏனெனில் பிரீமியம் அதிகம் என்பதாலும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவு என்பதாலும் இதனை அவர்கள் பரிந்துரை செய்யாமல் இருந்திருக்கலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இதன் மூலம் 10% வரை வருமானம் கிடைப்பதே பெரிய விஷயம் தான்.

க்ளைம் எப்போது

க்ளைம் எப்போது

மற்ற திட்டங்களில் பாலிசி காலம் முடிவடையும் போது தான் பாலிசியை க்ளைம் செய்ய முடியும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீங்கள் கணிசமான தொகையினை பெற முடியும். அதோடு ஒரு வேளை நாம் இல்லாவிட்டாலும், இடைப்பட்ட காலத்தில் கொடுத்த தொகையை எடுத்துக் கொள்ளாமல் முழு தொகையினையும் கொடுப்பார்கள். ஆக இதுவும் ஒரு நல்ல விஷயமாகவே இந்த பாலிசியில் கருதப்படுகிறது.

வரிச்சலுகை

வரிச்சலுகை

இதில் சில பாலிசிகளுக்கு வருமான வரி சலுகையும் 80சி பிரிவு மற்றும் 10 (10 டி கீழும் உண்டு. அதோடு இந்த பாலிசியில் நீங்கள் விபத்தினால் மரணம் மற்றும் இயலாமை போன்ற கூடுதல் சலுகைகளை பெறலாம்.

சிறந்த பாலிசிகள்

சிறந்த பாலிசிகள்

சிறந்த மணி பேக் பாலிசிகள் சில- மற்ற விவரங்களுக்கு பாலிசி பஜார் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

BSLI bachat money back plan
Aviva shan samruddhi
Bajaj Allianz cash assure
Bharti Axa life child adavantage
Canara HSBC OBC smart stage money back policy

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+