இந்தியாவில் திடீரென ஏற்படக்கூடிய ஒரு மருத்துவ செலவு அல்லது ஏதேனும் ஒரு அவசர செலவுகளுக்கு பெரும்பாலானவர்கள் பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களை தான் வாங்குகின்றனர். எந்த ஒரு அடமானமும் இல்லாமல் வழங்கப்படக் கூடியவை தான் தனிநபர் கடன்கள். இத்தகைய தனிநபர் கடன்களுக்கு வழக்கமாகவே வட்டி விகிதம் என்பது அதிகமாக தான் இருக்கும்.
பெர்சனல் லோன்: மருத்துவ தேவை மற்றும் பிற அவசர தேவைகளுக்காக தனிநபர் கடன்களை வாங்கும் போது பெரும்பாலானவர்களுக்கு மற்ற வங்கிகளில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்குவதற்கான கால அவகாசம் இருக்காது. எனவே அந்த சமயத்திற்கு பணம் தேவை என்பதற்காக ஒரு வங்கியலோ அல்லது நிதி நிறுவனத்திலோ தனிநபர் கடனை வாங்கி விடுவார்கள். ஆனால் அந்த எமர்ஜென்சி முடிந்து திரும்ப பார்க்கும்போது தான் பலருக்கும் நாம் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கி இருக்கிறோம் என்பது தெரியவரும்.

கொஞ்சம் யோசித்திருந்தால் குறைந்த வட்டியில் கடன் வாங்கி இருக்கலாமே என எண்ணுவார்கள். இது போன்ற சூழலை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். நீங்கள் ஏற்கனவே அதிக வட்டியில் தனிநபர் கடன் வாங்கி இருந்தால் கவலைப்பட வேண்டாம் Personal loan Refinancing முறையில் அதனை சரி செய்து விடலாம். அதாவது குறைந்தவட்டியில் வேறொரு தனிநபர் கடன் வாங்கி இதனை அடைப்பது.
ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன்: ஏற்கனவே அதிக வட்டி விகிதத்தில் வாங்கிய தனிநபர் கடனை குறைந்த வட்டியில் வேறு ஒரு தனி நபர் கடன் வாங்கி திரும்ப செலுத்துவது. இதனை தான் ஆங்கிலத்தில் Personal loan Refinancing என அழைக்கிறார்கள். முன்கூட்டியே வாங்கிய கடனுக்கு பதிலாக இன்னொரு கடனை வாங்குவது. உதாரணமாக மணி என்பவர் 2 லட்சம் ரூபாயில் பெர்சனல் லோன் வாங்கி இருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு அவர் இதற்காக ஆண்டுக்கு 14% வட்டியுடன் கடனை திரும்ப செலுத்த வேண்டும். ஆனால் கடன் வாங்கி இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அவருக்கு நாம் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கி இருக்கிறோம் என்பது தெரிய வருகிறது.
எனவே அவர் மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் எல்லாம் ஆய்வு செய்கிறார். அப்போது அவருக்கு ஆண்டுக்கு 11% வட்டி விகிதத்திலேயே பெர்சனல் போன் கிடைக்கிறது. எனவே அவர் இந்த 11% வட்டி விகிதத்தில் கடனை வாங்கி 14 சதவீதத்தில் வாங்கிய கடன் தொகையை செலுத்தி விடுகிறார். இதை தான் பர்சனல் லோன் ரீஃபைனான்சிங் என அழைக்கிறார்கள்.
குறைந்த வட்டி விகிதம்: ஏற்கனவே வாங்கிய நிறுவன நிதி நிறுவனத்தில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது, அதைவிட குறைந்த வட்டிக்கு வேறு ஒரு இடத்தில் கடன் கிடைக்கிறது எனும் போது நாம் திரும்ப செலுத்தக்கூடிய தொகை அதைவிட இதில் குறைவாக இருக்கும். எனவே உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இதனை கருத்தில் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் செலுத்தக்கூடிய வட்டி தொகையில் சேமிக்க முடியும்.
கிரெடிட் ஸ்கோர்: குறைந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டிருப்பவர்களுக்கு வங்கிகள் அதிக வட்டி விகிதத்தில் தான் தனிநபர் கடன்களை வழங்கும்.ஆனால் ஓர் ஆண்டு காலத்திற்கு அவர் சரியான முறையில் வட்டியை திரும்ப செலுத்தி வருகிறார் எனும் போது அவருடைய கிரெடிட் ஸ்டோர் என்பது உயர்ந்து விடும். எதிர்பார்த்த அளவு கிரெடிட் ஸ்கோர் உயர்ந்த உடன் அந்த நபர் பர்சனல் லோன் ரீஃபைனான்சியின் முறையில் வேறு ஒரு இடத்தில் கடன் வாங்கி இந்த கடனை அடைத்து விடலாம். இதன் மூலம் அவருக்கான கிரெடிட் ஸ்கோரும் உயரும், அவர் திரும்ப செலுத்தக்கூடிய தொகையையும் குறைக்க முடியும்.

கடன் செலுத்தும் காலம்: நாம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிகமாக இருந்தால் மாதாந்திர ஈஎம்ஐ தொகை குறைவாக இருக்கும், இதுவே நாம் கடனை திரும்ப செலுத்தும் காலம் குறைவாக இருந்தால் மாதாந்திர ஈஎம் ஐ தொகை அதிகமாக இருக்கும். இது தன்னுடைய மாதாந்திர பட்ஜெட்டில் பிரச்சினை ஏற்படுத்துகிறது என எண்ணுபவர்கள் குறைந்த கடன் செலுத்தும் காலம் கொண்ட தனிநபர் கடனுக்கு மாற்றாக அதிக கடன் செலுத்தும் காலம் கொண்ட தனிநபர் கடனுக்கு மாறிவிடலாம். இதனால் அவரால் மாதாந்திர செலவுகளை சரிவர கையாள முடியும்.
பல கடன்களை ஒரே கடனாக மாற்றுவது: சிலர் பல நிதி நிறுவனங்கள் கடன்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வங்கிக்கு ஒவ்வொரு தொகையை செலுத்த வேண்டி இருக்கும். அதற்கு மாற்றாக அனைத்து கடன்களை ஒரே இடத்தில் வைப்பது திரும்ப செலுத்துவதையும் நாம் மேலாண்மை செய்வதையும் எளிதாக்கும். எனவே பல இடங்களில் இருக்கும் கடன்களையும் ஒரே இடத்தில் கடன் வாங்கி அடைப்பவர்களுக்கு இந்த நடைமுறை உதவும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது: தனிநபர் கடன்களுக்கு அனைத்து வங்கிகளுமே அதிக வட்டி விதிக்கும். அதில் எது குறைவாக இருக்கிறது என ஒப்பிட்டு தான் நாம் ரீஃபைனான்சிங் செய்ய போகிறோம். ஆனால் இதில் சில விஷயங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். கட்ன் வாங்கும் போது செயலாக்க கட்டணம் என்பன உள்ளிட்ட பல மறைமுக கட்டணங்களை வங்கிகள் விதிக்கும். அதே போல சில வங்கிகள் முன்கூட்டியே கடனை செலுத்துவோருக்கு கூடுதலாக சில கட்டணங்களை விதிக்கும். எனவே ஏற்கனவே வாங்கிய கடனுக்கு இதுவரை செலுத்திய தொகை எவ்வளவு, இதற்கு பின் செலுத்தும் தொகை எவ்வளவு என கணக்கிட வேண்டும். புதிதாக கடன் வாங்கினால் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை கணக்கிட வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு எதில் லாபமோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவேளை புதிதாக கடன் வாங்கும் போது செயலாக்க கட்டணம், பழைய கடனை முன்கூட்டியே செலுத்துவதில் கூடுதல் கட்டணம் இவையெல்லாம் அதிகமாக இருக்கிறது இது நான் செலுத்தும் வட்டியை விட அதிகமாக உள்ளது என்றால் ரீஃபைனான்சிங் திட்டத்தை கைவிட்டு விடலாம். இல்லை புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பதன் மூலம் வட்டி தொகையில் கணிசமாக சேமிக்க முடியும் என்பவர்கள் ரீஃபைனான்சிங் முறையை தேர்வு செய்யலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications