இந்தியாவில் அண்மை காலமாக முதலீடு சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து இருக்கின்றன. பலரும் லட்சங்களிலும் கோடிகளிலும் மோசடியாளர்களிடம் பணத்தை இழக்கிறார்கள். ஆனால் நம்முடைய முதலீடு மோசமே போகாத பாதுகாப்பான முதலீடு திட்டங்கள் ஏராளமானவை அரசாங்கத்தாலேயே நமக்கு வழங்கப்படுகின்றன.
இந்த முதலீட்டு திட்டங்கள் நம்முடைய பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். உறுதியான உத்திரவாதமான வருமானத்தை நமக்கு திரும்ப தரும் . அந்த வகையில் தினமும் 100 ரூபாய் சேமிப்பு செய்தாலே 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொடுக்கக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் ஒன்று குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் போஸ்ட் ஆபீஸ் மூலம் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது . பொது வருங்கால வைப்பு நிதி ,மாதாந்திர வருமான திட்டம் ,தேசிய சேமிப்பு சான்றிதழ் ,மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ,கிசான் விகாஸ் பத்திரம் என பல்வேறு திட்டங்களில் நாம் நம்முடைய பணத்தை முதலீடு செய்யலாம்.
சிறிய தொகை முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்கக்கூடிய ஒரு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் தான் ஆர்டி திட்டம். அதாவது ரெக்கரிங் டெபாசிட் திட்டம். இதில் நாம் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கப்போகிறது என்பதையும் நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் . ஐந்து ஆண்டு காலம் இந்த ஆடை திட்டத்துக்கான முதிர்வு காலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் உங்களுக்கு 6.7 சதவீதம் என்ற வருடாந்திர வட்டி கிடைக்கும். நீங்கள் தினமும் 100 ரூபாய் சேமித்து வைத்தால் ஒரு மாதத்திற்கு உங்கள் கையில் 3000 ரூபாய் இருக்கும். இந்த 3000 ரூபாயை அப்படியே தபால் நிலையத்தின் ஆர்டி டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் . ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள் . ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு மட்டும் 1, 80,000 ரூபாய். உங்களுக்கு வட்டியோடு சேர்த்து கைக்கு 2, 14 ,097 ரூபாயாக கிடைக்கும்.
அதாவது சிறுக சிறுக சேமித்து ஒரு கணிசமான தொகையை நீங்கள் வருமானமாக பெற முடியும். இந்த திட்டத்தில் உங்களால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து வைக்கலாம். சிறுக சிறுக சேமிக்க கூடிய நபர்களுக்கு இந்த திட்டம் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெற்று தரும்.
அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்றாலே உங்களுக்கு என சேமிப்பு கணக்கு தொடங்கி பின்னர் செயலி வாயிலாகவே மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவிடலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications