சென்னை: மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் செய்யக்கூடிய முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபம் தருபவையாக இருக்கின்றன. இவ்வாறு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு விதிகளும் முதலீட்டு நிபுணர்களால் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு விதிமுறைதான் 7- 5- 3 - 1. இதனை பயன்படுத்தி எப்படி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து மிகப் பெரிய செல்வத்தை சேமிப்பது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
7 (7-5-3-1) : உங்களுடைய முதலீடு குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்க வேண்டும், அதாவது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உங்களுக்கு காம்பவுண்டிங் முறையில் கணிசமான லாபத்தை காண வேண்டும் எனில் நீங்கள் தொடர்ச்சியாக 7 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து உங்களது செல்வத்தை வளர விட வேண்டும். எனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே அதனை திட்டமிட வேண்டும்.

5 (7-5-3-1) : ஃபைவ் ஃபிங்கர் பிரேம் ஒர்க் என கூறுவார்கள். நம்முடைய ஐந்து விரல்களும் எப்படி ஒரே மாதிரி இல்லையோ அதேபோலத்தான் நம்முடைய முதலீட்டினை ஒரே பிரிவில் அல்லது ஒரே இடத்தில் தேக்கி விடக்கூடாது. நமது ஈக்விட்டி போர்ட்போலியோ என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
நல்ல தரமான பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய ஒரு நிதியாக அது இருக்க வேண்டும், நல்ல மதிப்பு கொண்ட பங்குகளில் முதலீடு செய்யும் நிதியை தேர்வு செய்ய வேண்டும், ஜிஏஆர்பி (growth at reasonable price) விகிதத்தின் அடிப்படையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும்.
சற்றே ரிஸ்க் இருந்தாலும் ஸ்மால் அல்லது மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஃபண்டாக இருந்தால் நீண்ட கால அடிப்படையில் அதிக லாபத்தை காணலாம். சர்வதேச நிறுவனங்களில் அல்லது சர்வதேச பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்வதும் சிறந்தது.
3 (7-5-3-1) : முதலீடு செய்த உடனே அதில் சிறந்த லாபம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உங்களது முதலீட்டின் மதிப்பும் உங்களுக்கு கிடைத்த லாபமும் ஏற்ற இறக்கம் கொண்டது. எனவே நிதி சார்ந்த மூன்று மனச் சிக்கல்கள் அதாவது உற்சாகம், பயம், பதற்றம் ஆகியவற்றை கடந்து வர வேண்டும்.
1 (7-5-3-1) : ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டினை ஸ்டெப் அப் செய்ய வேண்டும். அதாவது நடப்பாண்டில் 5000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அடுத்த ஆண்டில் அதனை 6000 , 7000 என படிப்படியாக உயர்த்துவது உங்களுக்கு மிகப்பெரிய செல்வத்தை சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications