சென்னை: பணத்தை சேமிப்பு கணக்கிலேயே வைக்காமல் சரியான முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்யக்கூடிய பலருக்கும் பல்வேறு இலக்குகள் இருக்கும் .
முதலீடு: குழந்தையின் உயர்கல்வி, சொந்தமாக வீடு வாங்குவது ,சொந்தமாக ஒரு வாகனம் வாங்குவது , ஓய்வு காலம் என பல இலக்குகளைக் கொண்டுதான் நாம் பணத்தை சேமிக்கிறோம். இவ்வாறு பணத்தை சேமிக்கும் போது நீங்கள் செய்த முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ளலாம். அது எப்படி என தற்போது பார்க்கலாம் விதிமுறை.

எப்போது இரட்டிப்பாகும்: Rule of 72 என ஆங்கிலத்தில் இதனை அழைக்கிறார்கள் . அதாவது எந்த ஒரு முதலீட்டிலும் நீங்கள் செய்த முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக மாறும் , அதாவது நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என்றால் அது எப்பொழுது 2 லட்சமாக மாறும் என்பதை கணக்கிட உதவுவது தான் ரூல் ஆஃப் 72.
விதி 72: உதாரணமாக நாம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என்றால் உங்களுக்கு ஆண்டுக்கு அது 8 சதவீத லாபம் தருகிறது எனும் போது 72/8 என வகுக்க வேண்டும். அப்பொழுது நமக்கு கிடைக்கும் விடை 9. உங்களுடைய 1 லட்சம் ரூபாய் முதலீடு 9 ஆண்டுகளில் 2 லட்சமாக மாறும். முதலீடு எவ்வளவு வட்டியை எனக்கு தருகிறது என தீர்க்கமாக உங்களுக்கு தெரிகிறது எனும்போது மிக எளிதாக இந்த ரூல் ஆஃப் 72 ஐ பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஃபிக்சட் டெபாசிட்: பல்வேறு வங்கிகளும் நமக்கு எஃப்டி எனப்படும் நிலையான வைப்பு தொகை திட்டங்களை வழங்குகின்றன, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இருந்து அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நாம் இந்த எஃப்டி திட்டங்களில் முதலீடு செய்ய முடிகிறது. குறைந்தபட்சம் 3 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு எஃப்டி திட்டத்தில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் அது 7 சதவீதம் வட்டி தருகிறது என்றால் உங்களிடம் இந்த ஒரு லட்சம் ரூபாய் முதலீடு 10.28 ஆண்டுகளில் (10 ஆண்டுகள் 3 மாதம் 11 நாட்கள்) உங்களுடைய பணம் 2 லட்சமாக உயர்ந்திருக்கும்.
பிபிஎஃப்: பிபிஎஃப் திட்டங்களுக்கு அரசு 7.1% வட்டி வழங்குகிறது என்றால் 72/ 7.1 என கணக்கிட்டால் 10.17 ஆண்டுகளில் (10 ஆண்டுகள் 2 மாதங்கள்) உங்களுடைய முதலீடு 2 லட்சமாக வளர்ந்திருக்கும். நம்முடைய முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாக வளரும் என்பதை தெரிந்து வைத்து கொள்வது நம் இலக்குகளை சரியாக திட்டமிடவும் அதற்கேற்ப முதலீட்டை அதிகரிக்கவும் நமக்கு உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications