அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) புள்ளிவிபரங்களின்படி, மே 2024-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மொத்த SIP கணக்குகள் 8.76 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது. மாதாந்திர SIP பங்களிப்பும் ரூ. 20,904 கோடியை எட்டியது. SIP முதலீடு கூட்டு வட்டி முறையில் இயங்குகிறது. பல முதலீட்டாளர்களும் தற்போது SIP முதலீடுகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். மாதம்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை என எப்படி வேண்டுமானாலும் SIP முதலீடுகளில் முதலீடு செய்யலாம். இன்னும் சிலருக்கு SIP முதலீடு என்றால் என்ன? என்பது குறித்த விவரங்கள் தெரியாமல் உள்ளது. அவர்களுக்குத்தான் இந்த பதிவு.
சிஸ்டெமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்: SIP முதலீடு, காலப்போக்கில் தங்கள் செல்வத்தை சீராக வளர்க்க விரும்பும் தனிநபர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. SIP என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு வகை முதலீடாகும். இதனைப் பயன்படுத்தி ஒருவர் சிறு தொகையை தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். சான்றாக ரூ. 500 அல்லது ரூ. 1000 போன்ற தொகையில் தவணையாகச் செலுத்த முடியும்.

SIP திட்டங்களில் ஃபண்டின் விலை அதிகமாக இருக்கும் போது, குறைந்த யூனிட்கள் வாங்கப்படுகின்றன. விலை குறைவாக இருக்கும் போது, அதிக யூனிட்கள் வாங்கப்படுகின்றன. மேலும் வழக்கமான, சிறிய SIP முதலீடுகள் கூட பல முதலீட்டாளர்களுக்கு பெரிய தொகையை சேமிக்க உதவும்.
SIP கால்குலேட்டர் என்றால் என்ன?: SIP கால்குலேட்டர் என்பது உங்கள் SIP முதலீடுகளின் வருமானத்தை மதிப்பிட உதவும் ஒரு ஆன்லைன் கருவியாகும். சேமிப்பு திட்டங்களுக்கு எப்படி ஆன்லைன் கால்குலேட்டர்கள் இருக்கிறதோ? அதேபோல SIP கால்குலேட்டர்களும் இருக்கின்றன.
இதில் நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? எவ்வளவு வருடாந்திர வருமானம்? என்ற விவரங்களை என்டர் செய்தால், உங்களால் எவ்வளவு லாபம் பெற முடியும்? என்பதைப் பார்க்க முடியும்.
ஸ்டெப் அப் SIP என்பது வருடா வருடம் குறிப்பிட்ட சதவீத தொகையை அதிகரிப்பதை குறிக்கிறது. உதாரணமாக இந்த வருடம் 1000 ரூபாய் SIP முதலீடு செய்கிறீர்கள் என்றால், மறு வருடம் அதை 10 % அதிகரித்து முதலீடு செய்வதை இது குறிக்கிறது. நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஸ்டெப் அப் SIP-கள் சிறந்த ஒன்று.
SIP முதலீட்டு திட்டத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கு, ஒரு உதாரணத்தை பார்ப்போம். தற்போது ஒரு நபர் தனது ஓய்வூதியத்திற்காக 50 லட்சம் ரூபாய் வருமானம் பெற நினைக்கிறார் என்றால், அவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும்.
இதற்கான வருடாந்திர வருமானம் 10 % என்றால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்ப்போம். 50 லட்சம் வருமானம் ஈட்ட ஒரு நபர் மாதம் 10,000 ரூபாயை தொடர்ந்து SIP முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான வருடாந்திர வருமானம் 10 சதவீதம் எனில் 15 ஆண்டுகளுக்குள் 51.3 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.
தற்பொழுது கொடுத்துள்ள உதாரணத்தில் 10% வருடாந்திர வருமானத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. நீங்கள் இந்த சதவீதத்தை 8% மற்றும் 10% என உங்கள் SIP முதலீட்டுக்கு கிடைக்கக் கூடிய வருடாந்திர வருமானத்தை வைத்து கால்குலேட் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் SIP என்றால் என்ன? SIP முதலீடு செய்பவர்களுக்கான வருமானம் எப்படி இருக்கும்? என்ற விவரங்களே. இதன் அடிப்படையில் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications