மாதம் மாதம் பென்ஷன் வேண்டுமா.. எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டம். தான் ஏற்றது..!

எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டம் ஒரு உடனடி வருடாந்திர திட்டமாகும். இது ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தும் ஒரு திட்டமாகும்.

இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டமாகும். இது ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசியாகும். ஆக இந்த திட்டத்தின் தொடக்கத்தில், உங்களின் விருப்பத்திற்குகேற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெறுவீர்கள். அதோடு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப மாத ஓய்வூதியம் பெறலாம்.

வயது வரம்பு

வயது வரம்பு

இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 30 வயது ஆகும். அதிகபட்சம் 85 வயதாகும். அதே போல குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு என்பது இதில் இல்லை. உங்களது பாலிசி முதிர்ச்சிகென்று இதில் அதிகபட்ச வயது இல்லை. அதோடு இந்த பாலிசியின் சலுகைகளை நீங்கள் மணி பேக்காக பெறலாம். மொத்தத்தில் சீரான ஒய்வூதியம் கிடைக்கும். இதில் பங்கு சந்தை அபாயங்கள் இல்லை.

ஓய்வூதிய முறை

ஓய்வூதிய முறை

உங்கள் ஓய்வூதியமானது ஓரு முறை பிரீமியம் செலுத்தியவுடன் தொடங்கி விடுகிறது. ஓய்வூதியத்தினை செலுத்தும் முறை நீங்கள் எதை தேர்தெடுக்கிறீர்களோ அதை சார்ந்திருக்கும். உங்களால் வருடாந்திர ஓய்வூதியம், அல்லது காலாண்டு, மாதாந்திரம் என்று பெற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையானது ஆண்டுக்கு 12,000 ரூபாயாக இருக்கும். அதாவது மாதம் 1,000 ரூபாயாக உள்ளது. இதில் அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது.

வரி சலுகை ஏதேனும் உண்டா?

வரி சலுகை ஏதேனும் உண்டா?

எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டத்தில், மற்ற பாலிசிகளை போலவே வருமான வரி சலுகைகள் உண்டு. பிரீமியங்களுக்கான வரி என்பது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 -சியின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் பெறும் ஓய்வூதியம் வரிகுட்பட்டிருக்கும். ஆனால் பிரீமியத்திற்காக நீங்கள் வரி செலுத்த வேண்டி இருக்காது.

கடன் வசதி உண்டா?

கடன் வசதி உண்டா?

சில மணி பேக் பாலிசிகளுக்கு எதிராக வங்கிகளில் நாம் கடனை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டத்தில் அப்படி ஏதும் பெற முடியாது. எனினும் ஆப்சன் F& J இருந்தால் மட்டும், 3 மாதங்களுக்கு பிறகு கடன் பெற முடியும். 3 மாதம் ஆன பிறகு சரண்டர் செய்துக் கொள்ளலாம்.

வேறு என்ன சலுகைகள்

வேறு என்ன சலுகைகள்

ஆப்சன் A
பிரீமியம் செலுத்திய பின்னர் உடனடியாக ஓய்வூதியம் தொடங்கி விடுகின்றது. இந்த திட்டத்தில் இறப்புக்கு பிறகும் நீங்கள் ஓய்வூதியத்தினை தேர்தெடுத்திருந்தால், உங்களுக்கு பிறகு உங்களது துணைக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஆண்டு தொகைக்கான தேர்வானது 7 வேறு வகையான தேர்வுகள் உள்ளன.
வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம், இறந்துவிட்டால் ஓய்வூதியம் கிடைக்காது.

ஆப்சன் BCDE -யில் என்ன சலுகை?

ஆப்சன் BCDE -யில் என்ன சலுகை?

A) 5 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் உண்டு. B) 10 ஆண்டுகளுக்கு உத்தரவாதம், c) 15 ஆண்டுகளுக்கு உத்தரவாதம், D) 20 ஆண்டுகளுக்கு உத்தரவாதம். மேற்கண்ட இந்த திட்டங்களில் குறிப்பிட்ட காலங்களுக்கு வருமானம் உண்டு. அது பாலிசிதாரர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கிடைக்கும். அதன் பிறகு முதலீட்டு தொகை கிடைக்காது.

Array

Array

ஆப்சன் F

இதில் பாலிசிதாரர் இருக்கும் வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இல்லாவிட்டால் நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். (அல்லது ) செலுத்திய பிரீமிய தொகையையும் பெற்றும் கொள்ளும் ஆப்சன் உண்டு.
ஆப்சன் G
ஆப்சன் G -யினை பொறுத்தவரையில் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். அதுவும் ஆண்டுக்கு 3% உயர்வுடன் கிடைக்கும்.
ஆப்சன் H
ஆப்சன் H -யினை வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் 50%, நாமினிக்கும் 50% ஓய்வூதியம் கிடைக்கும்.

ஆப்சன் J - வில் என்ன சலுகை?

ஆப்சன் J - வில் என்ன சலுகை?

ஆப்சன் I

இந்த ஆப்சன் I-யில் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் 100%, நாமினிக்கும் 100% ஓய்வூதியம் கிடைக்கும்.
ஆப்சன் J
இந்த ஆப்சன் J -யில் வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியம் 100%, நாமினிக்கும் 100% ஓய்வூதியம் கிடைக்கும். அதன் பிறகு நாமினிக்கு கட்டிய தொகை திரும்ப கிடைக்கும்.

தள்ளுபடி சலுகைகள்

தள்ளுபடி சலுகைகள்

5 லட்சம் ரூபாய்க்கு மேல் பாலிசி எடுத்தால் மட்டுமே சலுகைகள் கிடைக்கலாம். ஆக அதற்கேற்ப திட்டமிடுவது நல்லது. அதோடு சில ஆப்சன்களில் மட்டுமே உங்களது முதலீடு திரும்ப கிடைக்கும் என்பதால் அதனையும் கவனத்தில் கொள்வது நல்லது.

மற்ற விவரங்களுக்கு

மற்ற விவரங்களுக்கு

இதனை பற்றி https://licindia.in/Products/Pension-Plans/LIC-s-Jeevan-Akshay-VII என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது பாலிசி எடுக்கும்போது தகுந்த நபரிடம் முழு விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் எடுப்பது நல்லது.
உண்மையில் இந்த திட்டம் ஓய்வு காலத்திற்கான சிறந்த திட்டமாகும். இறப்பிற்கு பிறகும் கூட பாதுகாப்பான ஓய்வூதிய சலுகையினை குடும்பத்திற்கு வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+