மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது சிறு வயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து, ஓய்வு நேரத்தின் போது நிம்மதியாக பெரிய தொகையை பெறும் ஒரு சேமிப்பாகும்.
ஆனால் அதே நேரத்தில் ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு கிடைத்த மொத்த பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேமித்து ஒவ்வொரு மாதமும் வருமானம் வரும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
அந்த வகையில் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் எவை எவை என்பதை தற்போது பார்ப்போம்.
ஓய்வு பெற்றவர்கள்
பொதுவாக ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகையை பிக்சட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட், ஓய்வூதியம் சார்ந்த காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வதில் வழக்கமாக உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் மருத்துவம் அல்லது ஒரு சில அவசர கால சூழல் ஏற்படும்போது இந்த திட்டங்களில் இருந்து பணத்தை எடுப்பது கொஞ்சம் சிரமம் என்பதால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்
அந்த வகையில் ஓய்வு பெற்றவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்தால் பணத்தை எடுப்பது எளிது. அதுமட்டுமின்றி மற்ற திட்டங்களை விட அதிக வருமானம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்றவர்களுக்கு என சில சிறப்பு திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ளன என்பதும் அந்த திட்டங்களில் இருந்து பணத்தை வெளியே எடுப்பதும் எளிதான வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிஸ்டமேட்டிக் வித்ட்ரா திட்டம்
பெரும்பாலான ஓய்வு பெற்றவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதை ரிஸ்க் என நினைத்து அச்சத்துடன் அவற்றிலிருந்து விலகி உள்ளனர். ஆனால் ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைத்த ஓய்வூதிய தொகையின் ஒரு பகுதியை டெஃப்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அவற்றிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்ட்ரா திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
மாதந்தோறும் வருமானம்
SWP என்று கூறப்படும் சிஸ்டமேட்டிக் வித்ட்ரா திட்ட முதலீட்டில் முதலீட்டாளர்களின் முதலீடு கிட்டத்தட்ட அப்படியே இருக்கும் என்பதும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வருவாயும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஃப்ட் ஃபண்டுகள்
டெஃப்ட் ஃபண்டுகள் என்பது மற்ற ஃபண்டுகளை விட பாதுகாப்பானது என்பதும் ரிஸ்க் இல்லாதது என்பதும் குறிப்பிடதக்கது. வங்கிகள், அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பாண்டுகள் மற்றும் பணச்சந்தை சார்ந்த ஆவணங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுவதால் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டது.
வருமானம் குறைவா?
டெஃப்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஈக்யூடிட்டி திட்டங்களை விட குறைவான வருவாய் கிடைத்தாலும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளுடன் ஒப்பிடும் போது வருமானம் அதிகமாக கிடைக்கும்.அதுமட்டுமின்றி பிக்சட் டெபாசிட் திட்டங்களால் கிடைக்கும் வருமானத்திற்கு வரியும் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் வசதி
எனவே ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதியத் தொகையை டெஃப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து SWP என்று கூறப்படும் சிஸ்டமேட்டிக் வித்ட்ரா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நமது விருப்பப்படி ஒவ்வொரு மாதமும் பெரும் தொகையை நிறுத்தி வைக்கவோ அல்லது தொகையை மாற்றவோ முடியும் என்பதும் ஓய்வு பெற்றவர்களுக்கான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications