அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்! லக்ஷ்மி கடாட்சம் பெருக மிஸ் பண்ணிடாதீங்க?!

Akshaya Tritiya 2026: அட்சய அப்படின்னாலே குறையாததுன்னு அர்த்தம். அந்த நன்னாளில் நாம செய்யற சின்ன முதலீடு கூட எதிர்காலத்தில் பல மடங்கா பெருகும்ங்கிறது ஐதீகம். அதனால் தான் வருஷம் முழுவதும் காத்திருந்து, இந்த அட்சய திருதியை அன்றைக்கு குறைந்தபட்சம் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கிடணும்னு நம்ம ஊர் மக்கள் பிளான் பண்ணுவாங்க.

ஆனா 2026-ல அட்சய திருதியை என்னைக்கு வருது? தங்கம் வாங்க எந்த நேரம் ரொம்பவே நல்லது? அன்றைக்கு எந்த நேரத்தில் கடையில் கூட்டம் அள்ளும்? குழப்பமே வேண்டாம். லக்ஷ்மி கடாட்சம் உங்க வீட்ல நிலைச்சிருக்க, தங்கம் வாங்க மிகச் சிறந்த சுப முகூர்த்த நேரம் எதுங்கிற முழு விவரத்தையும், அந்த நல்ல நாளில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? என்னவெல்லாம் வாங்கலாம். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

அட்சய திருதியை 2026: தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்! லக்ஷ்மி கடாட்சம் பெருக மிஸ் பண்ணிடாதீங்க?!

அட்சய திருதியை என்றால் என்ன?

அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமண மதங்களில் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திதியின் மூன்றாம் நாள் (திருதியை) இந்நாளை குறிக்கும்.

அட்சய என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் குறையாதது அல்லது அழியாதது என்று பொருள். இந்நாளில் தொடங்கப்படும் எந்த ஒரு நற்செயலும் பல மடங்கு பெருகும் என்பது நம்மவர்களின் நம்பிக்கை. இதனால் இந்த நல்ல நாளில் விலை உயர்ந்த தங்கம் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இது மகாபாதரத்துடனும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.

அதாவது பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது., அவர்களுக்கு உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க சூரிய பகவான் அட்சய பாத்திரம் வழங்கிய நாள் இது என்றும் கூறப்படுகிறது. கங்கை நதி பூமியில் இறங்கிய நாள்.மகாலட்சுமி குபேரனுக்கு செல்வங்களை வழங்கிய நாள். விநாயக பெருமான் மகாபாரதத்தை எழுத தொடங்கிய நாள் என பல அம்சங்கள் இந்த நாளுக்கு சொந்தமாக உண்டு.

மொத்தத்தில் இந்த நல்ல நாளில் தங்கம் வாங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஏழைகளுக்கு உணவு, நீர் மற்றும் துணிகளை தானம் செய்வது அதிக புண்ணியத்தை தரும் என்றும் சொல்லப்படுகிறது.

நல்ல நேரம் எது?

இந்து நாட்காட்டியின் மிக முக்கியமான மங்களகரமான நாட்களில் ஒன்றான அட்சய திருதியை, 2026ம் ஆண்டு ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. புதிய முயற்சிகளை தொடங்கவும், தங்கம் வாங்கவும், முதலீடுகள் செய்யவும் இது மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு வைசாக மாதத்தின் வளர்பிறை திதியில் வரும் மூன்றாவது திதி இதுவாகும்.

திருதியை திதி ஏப்ரல் 19, காலை 10:49 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 20, காலை 07:27 மணிக்கு முடியும். இதில் உதய திதி ஏப்ரல் 19 அன்று வருவதால், அன்றைய தினமே அட்சய திருதியை கடைபிடிக்கப்படுகிறது.

எப்போது வாங்கலாம்?

அட்சய திருதியை அன்று செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமான தங்கம் வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு தங்கம் வாங்குவதற்கு நாள் முழுவதும் பல்வேறு சுப நேரங்கள் உள்ளன.

பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 10.49 மணி முதல் மதியம் 12.21 மணி வரை

தங்கம் வாங்குவதற்கான பொதுவான நேரம்: ஏப்ரல் 19 காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 20 அதிகாலை 05:52 மணி வரை.

தங்கம் வாங்க விரிவான சுப நேரங்கள்: ஏப்ரல் 19 அன்று காலை (சரம், லாபம், அமிர்தம்)காலை 10.49 - மதியம் 12.21மதியம்

மதியம் 01.58 - மாலை 03.35

மாலை/இரவு (சுபம், அமிர்தம், சரம்) மாலை 06:50 - இரவு 10.58

நள்ளிரவு (லாபம்)ஏப்ரல் 20, அதிகாலை 01.43 - 03:06 அதிகாலை (சுபம்)

அதிகாலை (சுபம்)ஏப்ரல் 20, அதிகாலை 04.29 - 05.52 மணி நேரம் வரை

ஆக மேற்கண்ட ஏதேனும் உகந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+