சர்வதேச சந்தையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தையானது ஒரு திக் திக் நிலையில் பயணித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவை சந்தித்து வருகின்றன. ஆனால் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பயம் அல்ல. மாறாக தரமான பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான ஒரு மெகா சேல் காலம் என்றே சொல்லலாம்.
இருந்தாலும் பங்குச் சந்தையில் போதிய அனுபவம் இல்லாதவர்கள், நீண்ட கால வளர்ச்சிகாக SIP -யில் முதலீடு செய்யலாம். அதிலும் சந்தையானது ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இந்த சூழலில், எந்த மியூச்சுவல் பண்டுகள் இந்த இக்கட்டான சூழலிலும் நிலையான லாபத்தை தரும்? போர் பதற்றத்தை தாண்டி உங்கள் பணத்தை மல்டிபேக்கராக மாற்றும் அந்த டாப் ஃபண்டுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

எஸ்ஐபி முதலீடுகளானது ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில், குறுகிய காலத்தில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம். ஏன் எதிர்மறையாக கூட இருக்கலாம். ஆனால் இந்த சூழலில் சந்தையில் இருந்து வெளியேறுவதோ அல்லது இடை நிறுத்தம் செய்வதோ தவறான ஒன்று. மாறாக நிதானமாகவும், சிந்தித்தும் செயல்பட வேண்டிய தருணம் இது.
நடப்பு ஆண்டை பொறுத்தவரையில் குறுகிய கால லாபத்தை துரத்துவதை விட, நீண்ட கால லாபத்தை திட்டமிட்டு முதலீடு செய்வதே நல்லது. குறிப்பாக எளிமையான இந்தியாவின் வளர்ச்சியை சார்ந்துள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டை திட்டமிடல் நல்லது.
புதிய முதலீட்டாளர்களாக இருந்தால் மூன்று ஃபண்ட் முறையை பின்பற்ற வேண்டும் என கூறும் சித்தார்த் மெளரியா, ஒரு பிளெக்ஸி கேப், ஒரு லார்ஜ் கேப் ஃபன்ட், ஒரு இன்டெக்ஸ் ஃபண்டுகளை பரிந்துரை செய்கிறார். இதில் நிலைத்தன்மை இருக்கும். அதேசமயம் உங்கள் முதலீடானது பிரித்தும் முதலீடு செய்யப்படும். அதோடு சந்தையின் நேரமும் அவசியம். எப்போது முதலீடு செய்கிறோம் என்பதை விட, முதலீட்டை எவ்வளவு காலம் அப்படியே வைத்திருக்கிறோம் என்பது அவசியம். ஆக போர் பதற்றங்களுக்கு மத்தியில் பயப்படாமல், இந்த கட்டமைப்பை சரியாக பின்பற்றினால் மிகப்பெரிய அளவில் செல்வத்தை உருவாக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் பிளெக்ஸி கேப் ஃபண்டுகள் சராசரியாக 18 - 27% அளவுக்கு வருமானம் கொடுத்துள்ளன.
சந்தையில் ஒரு முதலீட்டாளர் புதிதாக முதலீடு செய்கிறீர்கள் எனில், போர்ட்போலியோவில் தரமான 2 - 3 ஃபண்டுகள் இருந்தால் போதும். இது போர்ட்போலியோவை நிர்வகிப்பதை எளிதாக்கும். முதலீட்டை பொறுத்த வரையில் காலம் பொன் போன்றது. ஆக சந்தை எப்போது இறங்கும், எப்போது ஏறும் என காத்திருக்காமல், எவ்வளவு காலம் முதலீட்டை தொடருகிறோம் என்பதில் கவனத்தை செலுத்துங்கள். எந்த அளவுக்கு நீண்ட காலம் சந்தையில் இருக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் வருமானம் அதிகரிக்கும்.
சர்வதேச சூழல் நிச்சயமற்றதாக இருந்தாலும், உள்நாட்டு சாதகமான சூழலை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது உள்நாட்டு நுகர்வு சார்ந்த துறைகள் சிறப்பாக செயல்படலாம். தற்போதைய காலத்தில் எரிசக்தி துறை, பாதுகாப்பு துறை போன்ற ஃபண்டுகள் சிறந்த லாபத்தை கொடுக்கலாம். ஆக இதையும் உங்கள் போர்ட்போலியோவில் சேர்க்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக பங்கு சந்தை முதலீட்டை பொறுத்த வரையில், ஓரிரு ஆண்டுகளில் லாபம் பார்க்க முடியாது. 5 - 7 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். அப்போது தான் லாபம் ஈட்ட முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications
