முப்பது, நாற்பது ஆண்டுகள் ஓயாத உழைப்பு, குடும்பத்திற்காக செய்த தியாகங்கள், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேர்த்த சேமிப்பு என ஒரு மனிதனின் வாழ்நாள் ஓட்டம் ஓய்வு காலத்தில் தான் ஒரு நிறைவை எட்டுகிறது. ஆனால் அந்த ஓய்வு காலம் என்பது மற்றவர்களை சார்ந்து வாழும் காலமாக இருக்க வேண்டுமா?
தன்மானத்தோடும், மற்றவரை எதிர்பாராமல் கெத்தோடும் வாழ்வது என்பது பணத்தால் மட்டும் வருவதல்ல, அது நாம் செய்த சரியான நிதி திட்டமிடலால் வருவது. இனி நமக்கு யார் தருவார்கள்? என்ற கவலை மறைந்து, ஒவ்வொரு மாதமும் என் செலவிற்கு என் கணக்கில் பணம் வரும் என்கிற நிம்மதி தரும் அந்த உணர்வே தனி தான். அரசு வழங்கும் 100% பாதுகாப்புடன், உங்கள் சேமிப்பிற்கு அதிக வட்டி தந்து, மாதம் தோறும் நிலையான வருமானத்தை அள்ளித்தரும் சிறந்த 3 சேமிப்பு திட்டங்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்.

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY)
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக, இந்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் காலம் 10 ஆண்டுகள். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 10 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி வழங்கப்படும்.
உங்கள் விருப்ப படி மாதம் ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என ஓய்வூதியத்தை பெற்று கொள்ளலாம். 10 ஆண்டுகள் முடிவில், நீங்கள் முதலீடு செய்த முழுத் தொகையும் உங்களுக்கே திரும்ப கிடைக்கும். ஒரு வேளை 10 ஆண்டுகளுக்குள் முதலீட்டாளர் இறக்க நேரிட்டால், அவர் முதலீடு செய்த முழு தொகையும் அவரது வாரிசுதாரர் இடம் ஒப்படைக்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு தனி நபர் அதிகபட்சமாக 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.40% வட்டி விகிதமானது வருமானமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 9,250 ரூபாய் மாதாந்திர வருமானத்தை பெற முடியும். இந்த திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது, வயதான காலகட்டத்தில் சீரான வருமானம் கிடைக்க உதவும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தற்போதைய சூழலில் வட்டி விகிதமானது 8.2% ஆகும். இதில் வங்கி டெபாசிட்களை காட்டிலும் வட்டி அதிகம். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் இந்த திட்டத்தை தொடங்கலாம். 55 வயது முதல் 60 வயது வரையிலான விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். 5 ஆண்டு திட்டமான இதில், ஒருவர் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகையும் உண்டு. இதுவே இருவர் இணைந்து அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து பயனடைய முடியும்.

மாதாந்திர வருவாய் திட்டம்(MIS)
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டமும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்ற பிரபல திட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், அதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கி கணக்கில் சேரும். தற்போதைய சூழலில் வட்டி விகிதமானது ஆண்டுக்கு 7.4% ஆக வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் 9 லட்சம் ரூபாய் வரையிலும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். இவ்வாறு 15 லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு மாதம் 9,250 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதன் பிறகு உங்கள் அசல் தொகை அப்படியே உங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications