இந்தியாவினை பொறுத்தவரையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீது ஆர்வம் குறைவாக இருந்தாலும், தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த ஆர்வம் மிக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் அறிய முடிகின்றது.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரையில் ELSS என்ற ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டமானது ஒரு சிறந்த ஆப்சனாக உள்ளது.
வரி சலுகையுடன் லாபமும் உண்டு
பலருக்கும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆனால் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள். அப்படியானவர்களுக்கு இந்த பங்குகள் ஏற்றவை எனலாம். இந்த ஃபண்டில் வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வருமான வரி சலுகையும் கிடைக்கும். ஆக வரிச்சலுகையுடன் நல்ல லாபமும் கிடைக்க வேண்டுமெனில் அதற்கு ELSS ஃபண்டுகள் தான் சிறந்த ஆப்சன் எனலாம்.
லாக் இன் காலம் உண்டு
எனினும் இந்த திட்டத்தில் மூன்று வருடங்கள் லாக்-இன் காலம் உண்டு. ஆக நீங்கள் பணம் போட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. லாக் இன் காலம் முடிந்த பின்னர் உங்களது யூனிட்களை நீங்கள் விற்கவோ அல்லது மீண்டும் தொடர்ந்து கொள்ளலாம்.
பங்குகளில் அதிக முதலீடு
இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகையானது அதிகளவு பங்கு சந்தைகளில் முதலீடு செய்யப்படும். இது சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையில் பிரித்து செய்யப்படும். இதனால் உங்களுக்கு நீண்டகால நோக்கில் லாபகரமானதாக இருக்கும். எனினும் இந்த ஃபண்டில் 1 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு மேல் கிடைத்தால் அதற்கு 10% வருமான வரி செலுத்தினால் போதுமானது. இந்த ஃபண்டில் 80% பங்குகளில் தான் முதலீடு செய்யப்படுகின்றது.
சிறந்த ELSS ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரையில் ELSS என்ற ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டமானது, ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக உள்ளது. இதில் வரிச்சலுகையுடன் நல்ல லாபமும் கிடைக்க வேண்டுமெனில், அதற்கு ELSS ஃபண்டுகள் தான் பெஸ்ட் ஆப்சன் எனலாம்.குறிப்பாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய இது சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications