ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை, ஓய்வு பெற்ற பிறகு எங்கே முதலீடு செய்வது என்பது ஒவ்வொரு முதியவரின் மனதிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. ஒரு புறம் வட்டியே வராவிட்டாலும் பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பயம். மறுபுறம் விலைவாசி உயர்வை சமாளிக்க அதிக வட்டி கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு. இந்த இரு தேடலில் நம் முன்னே நிற்கும் இரண்டு அம்சங்கள், ஒன்று மத்திய அரசின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ( SCSS), இரண்டாவது வங்கிகளின் மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் (Senior Citizen FD).
தற்போதைய சூழலில் SCSS திட்டத்திற்கு வட்டி விகிதம் 8.2% வழங்கப்படுகிறது., வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு வட்டி விகிதம், வழக்கமான திட்டங்களை விட சற்று அதிகம்.
இருப்பினும் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்? வரிச் சலுகை என்று வரும்போது எது கை கொடுக்கும்? அவசரத் தேவைக்கு எதில் பணத்தை எளிதாக எடுக்கலாம்? எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பணத்திற்கு 100% கியாரண்டி தருவது எது? இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசங்களையும், உங்கள் தேவைக்கு எது கச்சிதமாக பொருந்தும் என்பதையும் விரிவாக பார்ப்போம்.

வழக்கமாக மாத வருமானம் நின்றுவிடும் போது, நாம் செய்யும் முதலீடுகளே, நமக்கான மாதாந்திர ஓய்வூதியமாக மாறுகின்றன. ஆக ஓய்வு காலத்திற்கு பிறகு முதலீடு என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அப்படி மூத்த குடிமக்களிடையே அதிகம் விவாதிக்கப்படும் திட்டங்கள் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டம்.
இதில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது மத்திய அரசு வழங்க கூடிய ஒரு சிறப்பு திட்டமாகும். இது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். மேற்கொண்டு 3 ஆண்டுகள் அதிகரித்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச முதலீடாக 30 லட்சம் ரூபாய் செய்து கொள்ளலாம். இதற்கு 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு உண்டு. இது அஞ்சலகத்தின் மூலம் வழங்கப்படுவதால், அரசின் பாதுகாப்பு உண்டு. ஆக மிகவும் பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.
பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் அரசு பணம்! எப்படி?
மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டமானது எந்த வங்கியில் வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். இதற்கு வழக்கமான திட்டங்களை விட 0.25% முதல் 0.75% வரை அதிகமாக வட்டி கிடைக்கிறது. வங்கிகள் சுமார் 7.1% என்ற விகிதத்தில் வழங்குகின்றன. ஆனால் சிறு நிதி நிறுவனங்கள் 8% வரையில் வட்டி கொடுக்கின்றன.
மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டத்தில் வங்கிக்கு வங்கி வட்டி மாறுபடும். உத்தரவாதமாக இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் வரையில் கவர் செய்யப்படுகிறது. இதில் 7 முதல் 10 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் இருக்கும். வட்டி விகிதம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கூட பெற்றுக் கொள்ள முடியும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆக உங்களுக்கு முதலீட்டு காலம் நெகிழ்வாக இருக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் இது பெஸ்ட்டாக இருக்கும்.
ஓய்வுக்கால முதலீட்டை பொறுத்த வரை முழுமையான பாதுகாப்பு மற்றும் தவறாத வருமானம் ஆகியவற்றுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் SCSS சற்று முன்னிலையில் உள்ளது. ஆனால் மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமல்ல. ஆக பணத்தின் ஒரு பகுதியை SCSS-லும், மீதமுள்ள பகுதியை வங்கி FD-களிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கும், அதே சமயம் அவசரத் தேவைக்கான பணப்புழக்கமும் இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications