பழைய வரி முறையா? புதிய வரி முறையா? - ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்தாலே சம்பளம் வாங்கும் ஊழியர்களின் தூக்கத்தை கெடுக்கும் பெரிய கேள்வி இதுதான். ஆனால் 2026 ஏப்ரல் 1 முதல் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. மத்திய அரசு புதிய வரி முறைக்கு (New Tax Regime) சிவப்பு கம்பளம் விரித்து உங்களை வரவேற்கும் அதே வேளையில், நாம் காலங்காலமாக பயன்படுத்தி வந்த பல வரிச் சலுகைகளுக்கு விடை கொடுத்துள்ளது.
80C முதலீடுகள், எல்ஐசி பிரீமியம், மருத்துவக் காப்பீடு, உங்கள் வீட்டு வாடகை (HRA) சலுகை கூட புதிய முறையில் இனி வேலைக்கு ஆகாது. வரி விகிதம் குறைவுதான், ஆனால் கையில் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. சலுகைகளை இழந்துவிட்டு குறைவான வரியை செலுத்துவது புத்திசாலித்தனமா? அல்லது பழைய முறையே மேல் தானா? இனி உங்கள் சேமிப்பு பழக்கத்தையே மாற்றி போடப் போகும் அந்த புதிய விதிகள் என்னென்ன? நீங்கள் எதையெல்லாம் இழக்கப் போகிறீர்கள்? இந்த மாற்றத்தால் உங்கள் பாக்கெட்டில் பணம் சேருமா அல்லது கரையுமா? விரிவாக அலசுவோம் வாருங்கள்.

பல தசாப்தங்களாக நாம் கடைபிடித்து வந்த பழைய வருமான வரி சட்டமானது ஓய்வு பெற்று, புதிய வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது பல மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக காலம் காலமாக பயன்படுத்தி வந்த 80 சி வரி சலுகைகள் உட்பட பல சலுகைகள் காணாமல் போயுள்ளன. புதிய வரி முறையில் வரி குறைவாக இருந்தாலும், சலுகைகள் ஏதும் இல்லை. புதிய வரி சட்டத்தின் பிரிவு 2020ன் கீழ் அரசு வரி விகிதங்களை குறைத்துள்ளது. ஆனால் விலக்குகளை இனி கோர முடியாது.
பழைய வரி முறையில் வரி அதிகம். ஆனால் வரி சலுகைகள் அதிகம். ஆனால் புதிய முறையில் வரி குறைவு. ஆனால் சலுகைகள் பெரிதாக கிடையாது. அப்படி நீங்கள் இழக்கப் போகும் சலுகைகளில், குறிப்பாக ஊழியர்கள் இழக்கப்போகும் சலுகைகள் பல. அவற்றில் முக்கியமானது HRA. வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இனி வரி விலக்கு கிடையாது. அதேபோல் LTA எனப்படும் விடுமுறை பயணப்படி சுற்றுலா பயணங்களுக்கான வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்காக பெறப்படும் இதர ரீ - இம்பர்ஸ்மென்ட் சலுகைகள், மைனர் குழந்தைகளின் வருமானத்திற்கான விலக்குகள் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
முதலீடுகளுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சாப்டர் VI - A-வின் கீழ் உள்ள சலுகைகளும் இனி கிடைக்காது.
குறிப்பாக 80Cயின் கீழ் பி.பி.எஃப் (PPF), எல்ஐசி பிரீமியம் (LIC), இ.எல்.எஸ்.எஸ் (ELSS), 80Dயின் கீழ் வழங்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமிய சலுகை, 80E கீழ் வழங்கப்படும் கல்விக்கடன் வட்டி, 80G -யின் கீழ் வழங்கப்படும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் நன்கொடைகள், சொந்தமாக வசிக்கும் வீட்டின் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு இனி வரி விலக்கு இல்லை.
பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் சில சலுகைகள் மட்டும் தக்க வைக்கப்பட்டுள்ளன. அதில் நிலையான கழிவு (Standard Deduction சலுகையானது 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனம் உங்கள் சார்பாக செலுத்தும் NPS தொகை (சம்பளத்தில் 14% வரை), அக்னி வீரர்களுக்கான சேமிப்பு திட்ட பங்களிப்பு, பிரிவு 80JJAA (புதிய சட்டத்தில் பிரிவு 146) போன்ற சில வணிகச் சலுகைகள் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன.
புதிய வரி முறையில் உங்கள் நஷ்டங்களை லாபத்துடன் ஈடுகட்டி வரியை குறைப்பது இனி கடினம். நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி, அந்த வீட்டின் வட்டியால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அந்த நஷ்டத்தை உங்கள் சம்பள வருமானத்துடன் சேர்த்து வரியை குறைக்க முடியாது. ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படாத கழிவுகளால் ஏற்படும் நஷ்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்து சென்று ஈடுகட்டும் வசதி புதிய முறையில் கிடையாது.
புதிய வரி விகிதங்கள் 2026 - 27ம் நிதியாண்டில்
4,00,000 ரூபாய் வரை - 0% வரி
4,00,001 ரூபாய் முதல் 8,00,000 ரூபாய் வரை - 5%
8,00,001 ரூபாய் முதல் 12,00,000 ரூபாய் வரை - 10%
12,00,001 ரூபாய் முதல் 16,00,000 ரூபாய் வரை - 15%
16,00,001 ரூபாய் முதல் 20,00,000 ரூபாய் வரை - 20%
20,00,001 ரூபாய் முதல் 24,00,000 ரூபாய் வரை - 25%
24,00,000 ரூபாய்க்கு மேல் - 30%
புதிய வரி சட்டத்தின் மிக முக்கியமான மாற்றம், இனி எந்த ஒரு அலவன்ஸ் அல்லது சலுகைக்கும் மற்ற சட்டங்களின் கீழ் நீங்கள் வரி விலக்கு கோர முடியாது.
மொத்தத்தில் புதிய வருமான வரிச் சட்டம், குழப்பங்கள் இல்லாத ஒரு தெளிவான மற்றும் எளிமையான வரி முறையை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறது. ஆனால் இது முதலீடு செய்து வரியை சேமிக்கும் காலத்திற்கு ஒரு முடிவுரை எழுதிவிட்டது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications

