இந்த பட்ஜெட் 2020 - 21-ல் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி வரம்புகளைக் கொண்டு வந்தார்.
இந்த புதிய வருமான வரி வரம்பில் பல வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியாது, ஆனால் வரியும் குறைவாக இருக்கும் எனச் சொன்னார்கள்.
எதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம், எதை பயன்படுத்தக் கூடாது என்பதை விளக்கினால் குழப்பம் அதிகரிக்கலாம்.
எது பெஸ்ட்
எனவே, 60 வயதுக்கு உட்பட்ட, சாதாரண குடிமகனுக்கு வரும் பல தரப்பட்ட வருமானத்தில், 2 லட்சம் ரூபாய் வருமான வரிக் கழிவை (80C, 80D, 80G... என எல்லா வரிச் சலுகைகளும் அடங்கும்) முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது புதிய வருமான வரி வரம்பா அல்லது பழைய வருமான வரி வரம்பா..? எது பெஸ்ட் எனப் பார்க்கப் போகிறோம். இதில் எவ்வளவு வரி (வரி + செஸ்) செலுத்த வேண்டி இருக்கும் என்பதையும் பார்ப்போம்.
பழைய வருமான வரி வரம்பு
1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி
2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி
5.0 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20 % வரி
10 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும் என வரம்புகள் இருக்கின்றன.
புதிய வருமான வரி வரம்பு
1 ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை 0 % வரி
2.5 லட்சம் முதல் 5.0 லட்சம் வரை 5 % வரி
5.0 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை 10 % வரி
7.5 லட்சம் முதல் 10.0 லட்சம் வரை 15 % வரி
10.0 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 % வரி
12.5 லட்சம் முதல் 15.0 லட்சம் வரை 25 % வரி
15 லட்சத்துக்கு மேல் 30 % வரி செலுத்த வேண்டும்.
2 கண்டீஷன்
1. மேலே சொல்லி இருக்கும் பழைய வருமான வரி வரம்பு அல்லது புதிய வருமான வரி வரம்பு என எதை வேண்டுமானாலும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.
2. புதிய வரி வரம்புகளைத் தேர்வு செய்பவர்கள், சில பல வரி விலக்குகள் மற்றும் வரிச் சலுகைகளைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
2.5 லட்சம் சம்பளம்
ஒருவர் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் தான் மொத்த சம்பளமாக ஈட்டுகிறார் என்றால், புதிய வருமான வரி வரம்போ, பழைய வருமான வரி வரம்போ இரண்டிலுமே வரி செலுத்தத் தேவை இல்லை. எனவே இதில் 2 லட்சம் வருமான வரிக் கழிவுகளைப் பற்றியும் கவலைப் படத் தேவை இல்லை.
5 லட்சம் சம்பளம் புதிய கணக்கு
ஒருவர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் தான் மொத்த சம்பளமாக ஈட்டுகிறார் என்றால், புதிய வருமான வரி வரம்பின் படி, 2 லட்சம் ரூபாய் வரிச் சலுகைகளை கழித்துக் கொள்ளாமல் 13,000 ரூபாய் வரி + செஸ் செலுத்த வேண்டும். ஆனால் 87A பிரிவின் படி இந்த 12,500 ரூபாய்க்கு விலக்கு பெறலாம். வரியே இல்லை என்பதால் 500 ரூபாய் செஸ் வரியும் கணக்கிடப்படாது. ஆக 1 ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை.
5 லட்சம் சம்பளம் பழைய கணக்கு
அதே நபர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் தான் சம்பளம் ஈட்டுகிறார் என்றால், பழைய வருமான வரி வரம்பின் படி 2 லட்சம் ரூபாய் வரிச் சலுகைகளைப் பெறலாம். அதோடு 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் தான் மொத்த வருமானமும் இருப்பதால் 87A பிரிவின் படி வரிக் கழிவுகளையும் பெறலாம். எனவே இதிலும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்.
7 லட்சம் சம்பளம் புதிய கணக்கு
ஒருவர் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் தான் மொத்த சம்பளமாக ஈட்டுகிறார் என்றால், புதிய வருமான வரி வரம்பின் படி, 2 லட்சம் ரூபாய் வரிச் சலுகைகளை கழித்துக் கொள்ள முடியாமல் 33,800 ரூபாய் வரி + செஸ் செலுத்த வேண்டும்.
7 லட்சம் சம்பளம் பழைய கணக்கு
ஆனால் அதற்கு நேர் எதிராக ஒருவர் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால், அவர் பழைய வருமான வரி வரம்பின் படி 2 லட்சம் ரூபாய் வரிச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம், எனவே மொத்த வருமானம் 5 லட்சமாகிவிடும். ஆக மொத்த வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாக இருப்பதால், 87A பிரிவின் படி வரிக் கழிவுகளையும் பெறலாம். எனவே ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம். புதிய வருமான வரி வரம்பை விட பழைய வருமான வரி வரம்பில் 33,800 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.
எது பெஸ்ட்
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த 7 லட்சம் ரூபாய்க்குள் தான் ஆண்டு வருமானம் ஈட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் சம்பளம் வரை ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை என்பதை பார்த்து இருப்பீர்கள். எனவே மக்களே, வரியை மிச்சம் பிடிக்கவும், வரிக் கழிவுகளைப் பெறவும், பழைய வருமான வரி வரம்பு தான் பெஸ்டாக இருக்கிறது.
வரிச் சலுகை + கழிவுகள்
1,50,000 ரூபாய் 80C - இன்சூரன்ஸ், டேர்ம் டெபாசிட், இ எல் எஸ் எஸ் முதலீடுகள், பி எஃப் என பலவற்றுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரிக் கழிவு பெறலாம்.
25,000 - 80D - ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் 25,000 வரிக் கழிவு
2,00,000 - 24 - வீட்டுக் கடனுக்கான வட்டிகளுக்கு வரிக் கழிவு
10 (13A) - வீட்டு வாடகைக்கான வரிக் கழிவு என இன்னும் பல்வேறு வரிக் கழிவுகள் இருக்கின்றன.
இதற்கு பழையது தான்
இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமாராக 3.75 லட்சம் ரூபாய்க்கு வரிக் கழிவு பெறலாம். ஆக சுமாராக 8.75 லட்சம் ரூபாய் வரை ஒரு ரூபாய் கூட வரி இல்லாமல் தப்பிக்கலாம். இந்த வரிக் கழிவுகள் எல்லாம் பழைய வருமான வரி வரம்புகளில் தான் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பழைய வருமான வரி வரம்பு தான் 7.5 லட்சம் ரூபாய் வரம் சம்பாதித்து வரிக் கழிவுகளை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு பெஸ்ட்.
இதுக்கு தான் புதுசு
புதிய வரி வரம்பு யாருக்கு லாயக்கு படும்..? 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள், வரிக் கழிவுகள் மற்றும் வரிச் சலுகைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் புதிய வருமான வரி வரம்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
7 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு எந்த வரிக் கழிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால்,
புதிய வரி வரம்புகள் படி 33,800 ரூபாய் (வரி + செஸ்) செலுத்த வேண்டும்.
பழைய வரி வரம்புகள் படி 54,600 ரூபாய் (வரி + செஸ்) செலுத்த வேண்டி இருக்கும். ஆக உங்களுக்கு எது சரிப்பட்டு வரும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications