இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதை விட, அதை சரியாக முதலீடு செய்வது தான் நம் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும். பாதுகாப்பு முக்கியம் என்று நினைப்பவர்கள் PPF-ஐத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதே சமயம் பணவீக்கத்தை தாண்டி அதிக லாபம் தேவை என நினைப்பவர்கள் SIP-ஐ நாடுகிறார்கள். ஆண்டுக்கு 10,000 ரூபாய் வீதம் 10 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், உங்கள் விருப்பம் எதுவாக இருக்க வேண்டும்?
ஆண்டுக்கு ஒரு நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் பிபிஎஃப் -ன் உறுதி வேண்டுமா அல்லது சந்தையின் ஏற்ற இறக்கங்களை கடந்து, நீண்ட கால அடிப்படையில் செல்வத்தை பெருக்கும் எஸ்ஐபி-ன் வேகம் வேண்டுமா?
இன்றைய நிதிச் சூழலில், எது உங்கள் இலக்குகளுக்கு சரியாக இருக்கும்? பிபிஎஃப் மற்றும் எஸ்ஐபி ஆகிய இரண்டு முதலீட்டு வழிகளையும், அவற்றின் 10 ஆண்டு காலப் பயணத்தையும் ஒப்பிட்டு, எது உங்களுக்கு அதிக பலன் தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆரம்ப கால முதலீடுகளை மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். குறிப்பாக அரசின் பாதுகாப்பு கிடைக்கும் பிபிஎஃப் போன்ற திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம் பங்குச் சந்தை போன்ற ரிஸ்க்கான முதலீடுகளை தவிர்க்கின்றனர். பிபிஎஃப் திட்டத்தை பொறுத்தவரை சந்தை அபாயம் இல்லை. வருமானம் சற்று குறைவு என்றாலும், நிலையான வருமானம் தரக்கூடிய ஒன்று. வரி சலுகை உள்ள ஒரு விருப்பமான தேர்வு. ஆனால் எஸ் ஐ பி முதலீட்டை பொறுத்த வரையில் சந்தை அபாயம் உண்டு என்றாலும், நீண்ட கால அடிப்படையில் சிறந்த வருமானம் கொடுக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆக இவ்விரு திட்டங்களில் ஆண்டுக்கு 10,000 ரூபாய் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செய்தால், எதில் அதிக வருமானம் கிடைக்கும், எது முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்பதை சிறிய கணக்கீடு மூலம் பார்ப்போம்.
பிபிஎஃப் திட்டத்திற்கு தற்போதைய சூழலில் வட்டி விகிதம் 7.1% ஆகும். EEE வரிச் சலுகையும் கிடைக்கிறது. அரசின் பாதுகாப்பில் இருப்பதால் நம்பகமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. எஸ்ஐபி-ஐ பார்க்கும்போது அதன் செயல்பாடே வேறு. ஏனெனில் எஸ்ஐபி-க்கள் பங்குச் சந்தையுடன் தொடர்பில் உள்ளன. குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் அதிகம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் சிறந்த வருமானத்தை கொடுத்து வருகின்றன.
உதாரணத்திற்கு ஒருவர் ஆண்டுக்கு 10,000 ரூபாயை 10 ஆண்டுகளுக்கு பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்கிறார். அவரின் மொத்த கார்ப்பஸ் விகிதம் 1.38 லட்சம் ரூபாய் மட்டுமே. இதே எஸ்ஐபி - ல் சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டால் சுமார் 1.95 லட்சம் ரூபாய் கார்ப்பஸ் இருக்கும். எஸ்ஐபி முதலீட்டில் நீங்கள் நீண்ட கால ஆதாய வரியை செலுத்த வேண்டியிருக்கும். அப்படியே செலுத்தினாலும் கூட, எஸ்ஐபி-யே அதிக வருமானம் கொடுக்க கூடிய ஒரு திட்டமாகவும் இருக்கும். ஆக பழமைவாத முதலீட்டாளர்களுக்கும், ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கும் பிபிஎஃப் ஏற்றதாக இருக்கும். ஆனால் இன்று இருக்கும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை தாண்டி வருமானம் ஈட்ட எஸ்ஐபி-யே சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதில் ஏற்ற இறக்கம் அதிகம் என்றாலும் வருமானமும் அதிகம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications