சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பங்குச் சந்தையின் எதிர்பாராத சரிவு - இவை அனைத்துமே தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை எங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும் அல்லது எந்த ஃபண்டுகள் சரிவை தாங்கி நிற்கும்? என்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயல்பு.
இக்கட்டான இந்தச் சூழலில், லார்ஜ்-கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் என சந்தையின் எந்த பிரிவிலும் முதலீடு செய்யும் சுதந்திரம் கொண்ட பிளெக்ஸி-கேப் ஃபண்டுகள் (Flexi-cap Funds), முதலீட்டாளர்களுக்கு ஒரு கவசமாக செயல்படுகின்றன. சந்தை உயரும்போது லாபத்தை அள்ளவும், சரியும் போது பாதுகாப்பை உறுதி செய்யவும் தெரிந்த இந்த ஸ்மார்ட் முதலீட்டு முறை, ஏன் தற்போதைய காலத்திற்கு அவசியமானது என்பதை விரிவாக பார்ப்போம்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க பிளெக்ஸி-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இந்த ஃபண்டுகள் சந்தை சூழலுக்கு ஏற்ப பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம், நஷ்டத்தை தடுத்து நீண்ட கால அடிப்படையில் சீரான லாபத்தைத் தருகின்றன.
சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் போது, நிதி மேலாளர்கள் முதலீட்டை பாதுகாப்பான லார்ஜ்-கேப் நிறுவனங்களுக்கு மாற்ற முடியும். வளர்ச்சி மற்றும் மதிப்பீடு சாதகமாக இருக்கும் போது, மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க முடியும். இது சந்தை சுழற்சிகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்களை காக்கிறது. மற்ற பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகள் உடன் ஒப்பிடுகையில், பிளெக்ஸி-கேப் ஃபண்டுகள் சிறப்பான வருமானத்தை ஈட்டியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 14.2% மும், 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 17% மும் வருமானம் தந்துள்ளன.
கடந்த பிப்ரவரி 2026-ல் மட்டும் சுமார் 6,925 கோடி ரூபாய் முதலீடு இந்த துறையில் குவிந்துள்ளது. இது ஈக்விட்டி ஃபண்ட் பிரிவிலேயே மிக அதிகம். சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் அதேசமயம் வளர்ச்சி தரும் வழிகளை தேடுகின்றனர்.
பிளெக்ஸி-கேப் ஃபண்டுகளில், எந்த சந்தை சூழலிலும் முதலீடு செய்ய நிதி மேலாளருக்கு முழு சுதந்திரம் உண்டு. இது சந்தை சரியும் போது பாதுகாப்பை தருவதற்கும், சந்தை உயரும்போது லாபத்தைப் பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது. சந்தையில் அவ்வப்போது கரெக்ஷன் நடந்தாலும், நீண்ட கால அடிப்படையில் லாபம் கொடுக்கலாம். ஆக உங்கள் போர்ட்ஃபோலியோவில் பிளெக்சி கேப் ஃபண்டுகளை வைத்திருப்பது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாகவும் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உங்களிடம் இருக்கும் ஃபண்டுகளில் பிளெக்ஸி-கேப் ஃபண்டுகளின் பங்கு எவ்வளவு என்பதை சரி பாருங்கள். உங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் 15% முதல் 20% வரை பிளெக்ஸி-கேப் ஃபண்டுகள் இருப்பது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
தற்போதைய சந்தை சூழலில் ஒரே ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் சார்ந்திருக்காமல், ஒட்டுமொத்த சந்தையிலும் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, பிளெக்ஸி-கேப் ஃபண்டுகள் ஒரு முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பிளெக்ஸி-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு, நிதி மேலாளரின் திறன், முதலீட்டு அணுகுமுறை, போர்ட்போலியோ மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட், செலவு விகிதம், நீண்ட கால நோக்கம் என்ன உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

SIP vs STP vs SWP:சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? முதலீட்டாளர்களின் சக்சஸ் எது?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..



Click it and Unblock the Notifications

