இன்றைய உலகில் கிரெடிட் கார்டுகள் மிகவும் அத்தியாவசியமானவை ஆகும். கிரெடிட் கார்டுகள் அவசரகாலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பல்வேறு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகளையும் அளிக்கிறது. வங்கிகள் பல சலுகைகளை கிரெடிட் கார்டுதாரர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இந்த வசதி முதியவர்களுக்கு தரப்படவில்லை.
மூத்த குடிமகன்கள் என்றில்லாமல் வங்கிகள் பொதுவாக நம்பக்கூடிய வருவாய் உடையவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டுகளை தருகின்றன. கிரெடிட் கார்டுகள் என்பது பாதுகாப்பற்ற கடன்களாக கருதப்படுகின்றன. காரணம் இதன் மூலம் அளிக்கப்படும் கடன்களுக்கு ஈடாக எந்த அடமானத்தையும் பெறுவதில்லை. கார்டு பெறுபவர்கள் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தி விடுவார்கள் என்ற நிலை இருந்தால் அவர்களுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

முதியவர்களைப் பொருத்தவரை வங்கிகள் அவர்களை அதிக அபாயம் உள்ளவர்களாகக் கருதுகின்றன. ஓய்வு பெற்ற பின்னர் நிலையான வருமானம் இல்லாதவர்கள் தங்களது கடனை திரும்பச் செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். இதனால் முதியவர்களுக்கு வங்கிகளால் கிரெடிட் கார்டு தருவதற்கு சிக்கல் ஏற்படுகிறது.
மூத்த குடிமகன்களுக்கு கிரெடிட் கார்டு தருவதற்கு ரிசர்வ் வங்கி எந்த விதிகளையும் உருவாக்கவில்லை. இருந்தாலும் 60 வயதுக்கு மேலானவர்களுக்கு கடன் தருவது அபாயத்தை விளைவிக்கும் என்று ரிசர்வ் வங்கி நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை தருவதற்கு வங்கிகள் அலட்சியம் காட்டுகின்றன. அதற்கு பதிலாக அவர்களுக்கு டெபிட் கார்டுகளை தருகின்றன.
கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயதுக்கு வங்கிகள் வெவ்வேறு அளவுகோல்களை பின்பற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹெச்டிஎப்சி வங்கி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும், சம்பளம் பெறும் நபர்களுக்கு அதிகபட்ச வயது 60 மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு 65 வயது என நிர்ணயித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின்படி, கிரெடிட் கார்டு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 21 முதல் 70 ஆண்டுகள் ஆகும்.
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பெற்றவர்களாக அல்லது சுயதொழில் செய்பவர்களாகவும் நல்ல கிரெடிட் ஸ்கோரையும் பெற்றிருக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு கிரெடிட் கார்டு மறுக்கப்பட்ட விவகாரம் மாநிலங்களவையிலும் கொண்டு வரப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி பூஜ்ய நேரத்தின் போது இந்த பிரச்சனையை எழுப்பினார், வங்கிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து டெபாசிட்களை ஏற்கத் தயாராக இருந்தாலும், அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்க மறுக்கின்றன. இந்த விதி பாரபட்சமானது என்றும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications