சென்னை: தற்போது மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியமானதாக மாறிவிட்டது. திடீரென ஒரு மருத்துவ செலவு ஏற்படும் போது நமது சேமிப்புகள் கரையாமல் இருக்கவும் நிதி ரீதியாக அலையாமல் உடலை சரி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தவும் மருத்துவ காப்பீடுகள் உதவுகின்றன.
இந்தியாவில் தற்போது இளம் வயதினருக்கே தீவிர உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில் 20களிலேயே மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய 20களில்தான் பலரும் வேலைக்கு செல்ல தொடங்குவார்கள். அவ்வாறு வேலைக்கு செல்லும் போது தான் முதன்முறையாக நிதி கையாளுகை குறித்து அவர்களுக்கு தெரியவரும்.

நிதி திட்டமிடல், எப்படி பணத்தை செலவிடுவது ,எதற்கெல்லாம் பணத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன போன்ற திட்டமிடுதலை தொடங்கக்கூடிய அந்த 20களிலேயே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு காப்பீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பலரும் முதலீடு குறித்தும் சேமிப்பு குறித்தும் யோசித்தாலும் காப்பீடு குறித்து சிந்திப்பதில்லை என சொல்லப்படுகிறது. நான் இளமையாக தான் இருக்கிறேன், ஆரோக்கியமாக தான் இருக்கிறேன் எதற்கு இந்த காப்பீடு என எண்ணுபவர்கள் உண்டு.
உண்மையில் இந்தியாவில் ஹார்ட் அட்டாக் வரும் நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களாம். அதேபோல டைப் 2 டயாபடீஸ் கண்டுபிடிக்கப்படும் நான்கில் ஒருவர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களாம். சிலருக்கு இளம் வயதிலேயே புற்றுநோய் மற்றும் கட்டிகள் உள்ளிட தீவிர பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகின்றன. இது போன்ற சமயங்களில் மருத்துவ காப்பீடு பேருதவியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
20களிலேயே மருத்துவ காப்பீடு பெறும் போது ,வயது குறைவாக இருப்பதால் குறைந்த பிரிமியம் தொகையில் அதிக கவரேஜ் கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட நோய்களுக்கான காத்திருப்பு காலம் முடிந்துவிடும் என்பதால் சில ஆண்டுகளிலேயே அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகளுக்கும் காப்பீடு பெற முடியும். இளம் வயதிலேயே மருத்துவ காப்பீட்டை பெறுவதால் நிதி ரீதியான ஒழுக்கம் வரும்.
சில காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பிரீமியம் செலுத்துபவர்களுக்கு பிரீமியத்தில் தள்ளுபடி, ஆண்டுதோறும் ஒருமுறை முழு உடல் பரிசோதனை, பிஎம்ஐ சரியாக பராமரிப்பவர்களுக்கு ஹெல்த் பாயிண்ட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. எனவே 20களிலேயே மருத்துவ காப்பீடு எடுக்கும் போது உடல்ரீதியான ஒழுக்கமும் வந்துவிடும். குறிப்பாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு செல்லாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications