உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இந்திய மக்கள் தொகையில் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை தான் அதிகம். மிடில் கிளாஸ் மக்களை பொருத்தவரை தங்களுடைய வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்கள் உழைக்கிறார்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நிதி மேலாண்மை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்கிறார் பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் நிதி சார்ந்த ஆய்வாளராக இருக்கக்கூடிய ஹர்திக் ஜோஷி.

மிடில் கிளாஸ் மக்கள் எதை செய்தால் தங்கள் பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. தன்னுடைய பதிவில், "நம்முடைய குழந்தைகளுக்கு ஐஐடி தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என நாம் சொல்லித் தருகிறோம் ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி என சொல்லித் தருகிறோமா இல்லை, திருமணங்களுக்கு பிரம்மாண்டமாக திட்டமிடுகிறோம் ஆனால் நம்முடைய ஓய்வு காலத்திற்கு திட்டமிடுகிறோமா இல்லை, கிலோ கணக்கில் தங்கம் வாங்கி வைக்கிறோம் ஆனால் ஒரு மருத்துவ காப்பீடு எடுக்கிறோமா இல்லை" என குறிப்பிட்டு இருக்கிறார்.

"நாம் பயன்படுத்தவே போகாத நிலத்தின் மீது நாம் முதலீடு செய்கிறோம், ஆனால் ஒரு அவசர கால நிதியை எடுத்து வைக்கிறோமா இல்லை, பெரும்பாலான இந்திய குடும்பங்களில் நிதி திட்டமிடல் என்றால் என்ன தெரியுமா நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் பணத்தை போடுவது, மகன் வேலைக்கு சென்று விட்டால் குடும்பம் நல்ல நிலைக்கு வந்து விடும்" என்பன உள்ளிடவை தான் என குறிப்பிட்டு இருக்கிறார். நிதி சார்ந்த விழிப்புணர்வை பெறுவது கிடையாது, கண்ணை மூடிக்கொண்டு குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் நம்பிக் கொண்டு தியாகத்தைப் போற்றி வாழ்க்கை போராட்டத்தை பெரிய விஷயமாக பேசுகிறோம் என கூறியுள்ளார்.
ஒவ்வொரு தலைமுறையினரிடம் இருந்தும் அடுத்த தலைமுறைகளுக்கு கண்மூடித்தனமான நம்பிக்கைகளே பகிரப்படுகின்றனவே தவிர போன தலைமுறை செய்த நிதி சார்ந்த தவறுகளை அடுத்த தலைமுறையினர் செய்யக்கூடாது என்ற அறிவு பகிரப்படுவதே கிடையாது என அவர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார். பகுதிநேர வருமானத்திற்கு திட்டமிடுவது கிடையாது, ஓய்வுக்கென ஒரு நிதியை ஒதுக்கீடு கிடையாது , டெர்ம் இன்சூரன்ஸ் கிடையாது, வீட்டில் நிதி மேலாண்மை குறித்த பேச்சே கிடையாது என இந்திய குடும்பங்களில் நிதி சார்ந்த தவறுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் குழந்தைகளுக்கு தயவு செய்து பணத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பதை கற்றுக் கொடுங்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல அதனை முறையாக மேலாண்மை செய்தால் தான் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி எப்போது சம்பளம் வருமோ என்று காத்திருக்க வேண்டிய நிலை உங்கள் குழந்தைகளுக்கு இருக்காது என தெரிவித்திருக்கிறார். நிதி மேலாண்மை என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமானது என அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications