மூத்த குடிமக்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏற்றதா.. எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட்கள் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதொரு முதலீடாக உள்ளது. இது பங்கு சந்தை, பத்திர சந்தை, இடிஎஃப், கடன் பத்திரங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இது சந்தையுடன் தொடர்பில் உள்ள முதலீடுகளில் ஒன்றாகும்.

இதில் உங்கள் பணம் நிதி மேலாளர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதில் மாத மாதம் முதலீடு செய்யும் எஸ் ஐ பி மூலமும் முதலீடு செய்யலாம். இல்லையேல் மொத்தமாகவும் முதலீடு செய்து கொள்ளலாம்.

பணவீக்கத்தை தாண்டி வருமானம்

பணவீக்கத்தை தாண்டி வருமானம்

ஆக இது முதலீட்டாளர்களுக்கு ஏற்றமான நெகிழ்வான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு பணவீக்கத்தினை தாண்டி வருமானம் பெற உதவிகரமாக உள்ளது.

பொதுவாக மூத்த குடிமக்கள் ரிஸ்க் தொடர்பான முதலீட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கின்றனர். அவர்கள் ஓய்வுபெறும் நாட்களை எண்ணிக் கொண்டுள்ளனர். ஆக அந்த சமயத்தில் ரிஸ்க் எடுப்பதை விரும்புவதில்லை.

வருமானம் அதிகம்

வருமானம் அதிகம்

இதனால் தான் என்பிஎஸ் திட்டம் போன்ற பாரம்பரிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இருப்பினும் இதில் மியூச்சுவல் ஃபண்டிலும் பல வகையான திட்டங்கள் உள்ளன. இதில் வருமானமும் அதிகம். இது வழக்கமான பிக்சட் டெபாசிட், என்பிஎஸ் திட்டங்களுடன் ஒப்பிடும்போது வருமானம் நன்றாகவே உள்ளது. குறிப்பாக நீண்டகால நோக்கில் நல்ல முதலீட்டு ஆப்சனாகவும் உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

மியூச்சுவல் ஃபண்டுகள் மூத்த குடிமக்களுக்களுக்கு ஒரு நெகிழ்வை அளிக்கின்றன. அவர்கள் நினைத்த போது பணத்தினை எடுத்துக் கொள்ள ஆப்சன் உண்டு. ஆனால் என்பிஎஸ், பிக்சட் டெபாசிட்களில் அப்படி இல்லை. இதில் பல நிபந்தனைகள் உண்டு. ஆக மூத்த குடிமக்கள் தங்கள் முதலீடுகளை பிரித்து முதலீடு செய்ய வழிவகை செய்கிறது.

என்னென்ன ஃபண்டுகள்

என்னென்ன ஃபண்டுகள்

குறிப்பாக பேலன்ஸ்டு ஃபண்ட், டெப்ட் ஃபண்டுகள், ஈக்விட்டி லார்ஜ் கேப் ஃபண்ட்கள் என பல பண்டுகள் உள்ளன. இதில் ஈக்விட்டி ஃபண்டுகள் பணவீக்கத்தினை தாண்டி லாபம் கொடுக்கும் ஃபண்டுகளாக உள்ளன. ஆக இது பணவீக்கத்திற்கு எதிராக போராட மூத்த குடிமக்களுக்கு உதவும். குறிப்பாக எஸ் ஐ பி ஆப்சன் மிக உதவிகரமாக இருக்கும்.

மற்ற முதலீடுகள்

மற்ற முதலீடுகள்

தற்போதைய லெவலில் பிக்சட் டெபாசிட்கள் 3 - 7% வரையில் மூத்த குடிமக்களுக்கு வட்டி கொடுக்கின்றன. இதே அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டங்களுக்கு 7.6% வட்டியும், தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 9 - 12% வரையில் வருமானம் கிடைக்கின்றது.. எனினும் மியூச்சுவல் ஃபண்டுகளில் வருமானம் அதிகம். விருப்பத்திற்கு ஏற்ற முதலீடாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+