நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்வது வழக்கம். இருப்பினும் சமீபகாலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பங்குச் சந்தை என்ற உடனே நமக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்தான் சட்டென நினைவில் வரும்.
பங்குச் சந்தையில் நாம் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது என்ற விளம்பரத்தை பார்த்து இருப்போம். மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதிலும் சந்தை அபாயம் உள்ளது என்ற எச்சரிக்கையையும் நாம் கேட்டு இருப்போம்.

18ம் நூற்றாண்டில் நெதர்லாந்தில்தான் முதல் முறையாக மியூச்சுவல் பண்ட் என்ற கான்செப்ட் உருவானது. இரண்டு நூற்றாண்டுகள் கழித்துதான் இந்தியாவுக்குள் மியூச்சுவல் பண்ட் வந்தது. 20ம் நூற்றாண்டில் 1963ல் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தொடங்கியபோதுதான் மியூச்சுவல் பண்ட் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
ஆரம்பத்தில் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை நினைத்த நேரத்தில் திரும்ப பெற முடியாது. ஆனால் தற்போது அந்த கட்டுப்பாடு கிடையாது. சில கட்டணங்கள் மற்றும் வரிகளுடன் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற பரஸ்பர நிதி நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.
பான் கார்டு மற்றும் புரோக்கிங் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ள எவரும் பல்வேறு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் அவற்றை புரிந்து முதலீடு செய்வது எளிதானது அல்ல. ஆனால் பரஸ்பர நிதி நிறுவனங்கள் தொழில்முறை நிதி மேலாளர்கள் தலைமையில் முதலீட்டு போர்ட்போலியாக்களை உருவாக்குகிறார்கள்.
சாமானிய முதலீட்டாளர்களுக்கு பல பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறார்கள். சந்தை ஏற்ற இறக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை.
முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு, தங்களின் நிதி அறிவு மற்றும் இடர் சகிப்புத்தன்மையில் அடிப்படையில் எப்போது முதலீடு செய்வது என்று முடிவு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பரஸ்பர நிதிகள் சிறந்த தேர்வாக இருக்காது.
அதேசமயம் தங்களுக்காக பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்போலியாவை உருவாக்க நேரமோ அல்லது ஆர்வமோ இல்லாத சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் பண்டுகள் ஏற்றது. மியூச்சுவல் பண்டுகள் எளிமை, மலிவு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை வழங்குகின்றன. இதனால் முதலீடுகளின் நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைகின்றன. தங்கள் முதலீடுகளை சுதந்திரமாக நிர்வகிக்க முடியாதவர்களுக்கு மியூச்சுவல் பண்டுகள் ஒரு புத்திசாலித்தனமான விருப்பமாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications