உலக முதலீட்டு ஜாம்பவானாக அறியப்படுபவர் வாரன் பஃபெட். சிறுவயதிலிருந்தே முதலீடு செய்வதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர். இவரை பொருத்தவரை தனக்கென சில கொள்கைகளை வைத்திருக்கிறார். அந்த கொள்கையின் அடிப்படையில் தான் அவர் முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார் .
வாரன் பஃபெட் " சிக்கலான விஷயங்களைப் பின்பற்றி நம்மால் செல்வத்தை பெருக்க முடியாது, சில முட்டாள்தனமான தவறுகளை தவிர்த்தாலே நம்மால் செல்வத்தை சேர்த்து விட முடியும்" என கூறுபவர் . பண விஷயத்தில் நாம் செய்யக்கூடிய ஐந்து தவறுகளை சரி செய்து விட்டாலே போதும் தானாக உங்களின் செல்வம் பெருகும் எனக் கூறுகிறார். அந்த ஐந்து பண தவறுகள் என்ன என்பதை தான் தற்போது நாம் விரிவாக பார்க்க போகிறோம்.

அளவுக்கு அதிக கடன்: நம்மால் கையாள முடியாத அளவு கடனை ஒருபோதும் வாங்க கூடாது , இவ்வாறு கைமீறி நாம் கடனை வாங்க தொடங்கினால் அது சிறுக சிறுக வளர்ச்சி அடைந்த பின்னாளில் பெரிய பிரச்சினையாக உருவாகும் எனக் கூறுகிறார் . தேவை இல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது கடன் வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என கூறுகிறார். கடன் உங்களுடைய சேமிப்பை மட்டும் கரைப்பது கிடையாது உங்களுடைய மன அமைதியையும் எடுத்துச் சென்று விடும் என்கிறார்.
தேவையற்ற செலவுகள்: வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ற வகையில் நம்முடைய செலவுகளை அதிகரிப்பது சரியான நிதி மேலாண்மை கிடையாது என்பது இவருடைய கருத்து. தேவை இல்லாமல் ஆடம்பர கார்களை வாங்குவது, ஆடம்பரமாக சுற்றுலா செல்வது, தன்னிடம் பணம் இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக சில பொருட்கள் மீது செலவு செய்வது தேவையற்றது என கூறுகிறார் . இதற்கு அவரே ஒரு உதாரணம் தன்னிடம் பல கோடி ரூபாய் பணம் இருந்தாலும் 1958 ஆம் ஆண்டு தான் வாங்கிய ஒரு சிறிய இல்லத்தில் தான் இன்னமும் வாரன் பஃபெட் வசித்து வருகிறார். உங்களுக்கு தேவையற்ற பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு தேவையாக இருக்கும் பொருட்களை நீங்கள் விரைவில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதே இவர் அடிக்கடி கூறும் கருத்து.
தவறான முதலீட்டை தேர்வு செய்வது : நம்முடைய வருமானத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பது அவசியம் ஆனால் சரியான இடத்தில் முதலீடு செய்வது முக்கியம் ன கூறுகிறார் . எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் குறிப்பிட்ட சில பங்குகளை வாங்குவது குறுகிய கால லாபத்திற்காக முதலீடு செய்வது உள்ளிட்டவை மோசமான பணப்பழக்கம் எனக் கூறுகிறார் . இந்த உலகிலேயே சக்தி வாய்ந்த ஆயுதம் முதலீடு தான் என குறிப்பிடும் அவர் உங்களுக்கு தெரியாத ஒரு தொழிலில் எப்பொழுது முதலீடு செய்யாதீர்கள் எனக் கூறுகிறார் . சரியான முறையில் ஆய்வு செய்து ஒரு நிறுவனம் குறித்து அனைத்து தகவலும் தெரிந்த பிறகு முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார் .
அவசர கால நிதி : இந்த வாழ்க்கை என்பது நிலையற்ற தன்மை கொண்டது .எனவே எப்பொழுதுமே ஒரு அவசர கால நிதியை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பது இவருடைய பிரதான அறிவுரை. திடீரென வேலை இழப்பது உடல்நிலை சரியில்லாமல் போவது உள்ளிட்டவை நிதி ரீதியாக உங்களை பெரும் சிக்கலில் ஆளாக்கும். அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சரியான ஒரு அவசரகால நிதியை எடுத்து வைப்பது அவசியம் .
ஷார்ட் கட் கிடையாது: கோடீஸ்வரனாவதற்கு ஷார்ட் கட் என்பது கிடையாது. அதாவது ரியல் எஸ்டேட் ஆக இருந்தாலும் சரி பங்குச்சந்தையாக இருந்தாலும் சரி பொறுமை தான் உங்களை பணக்காரனாக்கும் மந்திரம் என கூறுகிறார் . ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது வளர்வதற்கு ஒரு காலத்தை வழங்க வேண்டும் அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதே இவருடைய பிரதான அறிவுரை. இதில் முதலீடு செய்தால் உடனே லாபம் கிடைக்கும் என்பன போன்ற விளம்பரங்களை நம்பாதீர்கள் என கூறுகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications