இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பல அடிப்படை விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுரை செய்வார்கள்.
அவற்றில் ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கட்டாயம் வாரிசுரிமையை குறிப்பிட வேண்டும் என்ற நிலையில்அது குறித்த முழுமையான விவரங்களை தற்போது பார்ப்போம்.
வாரிசு
வாரிசு உரிமை என்பது ஒரு முதலீட்டாளர் காலமான பின்பு அந்த முதலீடு யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை குறிப்பிடும் ஒரு அம்சமாகும். மன்னர் காலத்திலிருந்தே வாரிசுகள் நியமனம் செய்வது வழக்கமாக உள்ளது என்பதும் மன்னர்கள் தங்களுக்கு பின் யார் ராஜ்யத்தை ஆள வேண்டும் என்பதற்கான வாரிசுகளை நியமனம் செய்வார்கள் என்பது குறிப்பிடப்பட்டது.
உயில்
தற்போது பலர் தங்களது சொத்துக்களை தங்களது மரணத்திற்குப் பின்னர் யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை உயில் மூலம் எழுதி வைத்து இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு வாரிசு உரிமையை முறையாக நியமனம் செய்து விட்டால் அந்த சொத்துக்களை உரிமை கொள்வதற்கோ அல்லது அந்த சொத்துக்களின் வருமானத்தை பெறுவதற்கோ வாரிசுதாரர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது.
சட்டச்சிக்கல்
ஆனால் ஒரு முதலீட்டாளர் தனது சொத்துக்கான வாரிசு உரிமையை குறிப்பிட்டவில்லை என்றால் முதலீட்டாளரின் சட்டபூர்வமான வாரிசுகள் அந்த முதலீடுகளை பெறுவதற்கு தாங்கள் தான் அவருடைய வாரிசு என்பதை சட்ட பூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நீண்டகால செயல்முறை என்பதால் முதலீட்டாளர் உயிரோடு இருக்கும்போதே வாரிசு நியமனம் செய்து விட்டால் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மியூச்சுவல் ஃபண்டில் வாரிசுதாரர்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பொருத்தவரை வாரிசுரிமை அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய வாரிசுகளின் பெயர்களை எளிதில் சேர்க்கலாம்.
ஆன்லைனில் வாரிசுதாரர்
ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை வாரிசுகளாக ஆன்லைன் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் சேர்த்து விட்டால் அவருடைய மரணத்திற்கு பின்னர் அந்த முதலீடு வாரிசுதாரர்களுக்கு கிடைக்கும். மேலும் ஒவ்வொரு வாரிசுதாரர்களின்பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களையும், தங்களுடைய முதலீட்டில் எத்தனை சதவீதம் யாருக்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும் என்பது முக்கியம் ஆகும்.
முதலீட்டாளர் சேவை மையம்
ஒருவேளை ஆன்லைன் வசதி இல்லாவிட்டால் அருகிலுள்ள நீங்கள் முதலில் செய்த நிறுவனத்தின் கிளைக்கு சென்றோ அல்லது முதலீட்டாளர்கள் சேவை மையத்திற்கு சென்றோ வாரிசுதாரர்கள் நியமனம் செய்யலாம். ஒரு எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தில் வாரிசுதாரர்களின் முழு விபரங்களை குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டால் உங்கள் முதலீட்டிற்கு சட்டபூர்வமான வாரிசுதாரர் நியமனம் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications