பொதுவாக பணம் சேமிக்க வேண்டும் என சொன்னாலே 50-30-20 விதியை ஃபாலோ பண்ணுங்க என பரவலாக அறிவுரை சொல்லப்படுவது உண்டு. ஆனால் இது இப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு செட் ஆகாது என கூறி பணம் சேமிக்கவும் பணக்காரனாகவும் புது விதி ஒன்று பிரபலமாகி வருகிறது.
பொதுவாக கூறப்படும் 50-30-20 விதியின் படி ஒரு நபர் தனது மாத வருமானத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும். அதில் 50% பணமானது வாடகை, மளிகை பொருட்கள், மின்சாரம், தண்ணீர், இன்சூரன்ஸ் மற்றும் கடன்களுக்கான இஎம்ஐ ஆகியவற்றுக்கு செலவிடப்பட வேண்டும். 30% பணத்தை வெளியே சாப்பிடுவது, சினிமா, பொழுதுபோக்கு, பயணம் மற்றும் ஆடம்பரச் செலவுகளுக்கு பயன்படுத்தலாம். 20% பணத்தை சேமிப்பு மற்றும் முதலீடு, அவசர கால நிதி ஆகியவற்றுக்கு ஒதுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைச் செலவுகள் குறிப்பாக பெருநகரங்களில் வீட்டு வாடகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. இதனால் பலரால் தங்களது அத்தியாவசிய தேவைகளை சமாளிக்கவே 50%-க்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே 20% சேமிப்பு இலக்கை அடைவது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.
இந்த சிக்கல்களுக்கு தீர்வாகவும், இன்றைய பொருளாதார யதார்த்தத்திற்கு ஏற்பவும் நிதி நிபுணர்கள் புதிய உத்திகளை பரிந்துரைக்கின்றனர். அதன்படி, 'தேவைகள்' மற்றும் 'விருப்பங்கள்' ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையை மிக துல்லியமாக பிரிக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் 'விருப்பங்கள்' பட்டியலில் உள்ள ஓடிடி சந்தாக்கள், அடிக்கடி வெளியே சாப்பிடுதல் போன்றவற்றை தற்காலிகமாக குறைத்து, அந்த தொகையை முழுமையாக சேமிப்பிற்கு திருப்ப வேண்டும் என்கின்றனர். அதாவது செலவு, சேமிப்புக்கு அதிக ஒதுக்கீடும் விருப்பங்கள் சார்ந்த செலவுக்கு குறைந்தபட்சமும் என பிரிக்க வேண்டும்.
பாரம்பரிய விதியை போல செலவு செய்தது போக மிச்சமிருப்பதைச் சேமிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, சம்பளம் வந்தவுடன் முதலில் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான தொகையை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள தொகையில் மட்டுமே மற்ற செலவுகளை செய்ய வேண்டும் என்ற புதிய பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அடுத்ததாக வெறும் சேமிப்பை மட்டுமே நம்பியிராமல் அதாவது பணத்தை வெறுமனமே அக்க்வுண்டில் வைத்திருக்காமல் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். மேலும் வேலை தவிர்த்து மாற்று வருமானம் (Side Hustles), ஃப்ரீலான்சிங் , முதலீடுகள் மூலம் வருமானத்தை உயர்த்துவது ஆகிய வழிமுறைகளை கையாள வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.
காலத்திற்கேற்ப விதிகளை புதுப்பித்து தற்கால பொருளாதார சூழலுக்கு ஏற்ப பட்ஜெட்டை மாற்றியமைப்பது மட்டுமே நிதி சுதந்திரம் அடைய உதவும் என்கின்றனர். எனவே மாதம் எஸ்ஐபி, உள்ளிட்டவற்றை போடுங்கள். இதனால் தானாகவே சம்பளம் வந்த உடன் முதலீட்டுக்கு ஒரு பகுதி பணம் சென்று விடும். மீதமுள்ள பணத்தில் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளலாம் அது போக இருக்கும் பணத்திற்கு வெளியில் செல்வது போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


