கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சொந்தமாக ஒரு வீடு வாங்கி அந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. ஆனால் இந்த வீடு வாங்கும் முடிவை எடுப்பது அத்தனை எளிதானது அல்ல. நாம் வசிக்கும் நகரத்தில் வாங்குவதா அல்லது சொந்த கிராமத்தில் வாங்குவதா என பல குழப்பங்கள் இருக்கும்.
ஆனால் இங்கே ஒரு நபர் நகரம், கிராமம் என பல இடங்களிலும் சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 32 வயதான ரவி ஷர்மா ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் இவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியா முழுவதும் இவருக்கு சொந்தமாக 23 வீடுகள் இருக்கின்றன. சிட்னியில் இரண்டு வீடுகளும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் மொத்தம் 21 வீடுகளும் என தனக்கு சொந்தமாக 23 வீடுகள் இருப்பதாக கூறுகிறார்.

ஆனால் அப்படி இருந்தும் தான் தொடர்ந்து வாடகை வீட்டில் தான் வசிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒரு பேட்டி ஒன்றில் இது குறித்து குறிப்பிட்டிருக்கும் அவர் என்னிடம் இருபதுக்கும் அதிகமான சொந்த வீடுகள் இருக்கின்றன. ஆனால் நான் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் என கூறியிருக்கிறார். சிட்னியில் மூன்று படுக்கையறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான் வாடகைக்கு வசிக்கிறேன். வாரத்திற்கு 1420 டாலர்களை நான் வாடகையாக செலுத்துகிறேன் என கூறியிருக்கிறார்.
இதனை Rentvesting Startegy என அழைக்கின்றனர். அதாவது நாம் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றுக்காக ஒரு இடத்தில் தங்கி இருக்கிறோம் ஆனால் அங்கே வீடு, ரியல் எஸ்டேட் விலை அதிகமாக இருக்கிறது. நாம் இங்கேதான் இருக்க போகிறோம் என்பதற்காக இந்த இடத்தில் வீடு அல்லது சொத்து வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களில் குறைந்த விலையில் வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு , தான் வசிக்கக்கூடிய ஊரில் வாடகைக்கு இருப்பது நல்ல யோசனை என இவர் கூறுகிறார்.
21 வயதில் முதன்முறையாக டப்போ என்ற இடத்தில் 1,90,000 டாலர்களை கொடுத்து ஒரு மூன்று படுக்கையறை கொண்ட வீட்டினை வாங்கி இருக்கார். அதனை வாடகைக்க விடுந்து அதில் வந்த வருமானத்தையும் தன்னுடைய வருமானத்திலும் சேர்த்து வைத்து ஆஸ்திரேலியாவும் பல்வேறு நகரங்களிலும் நல்ல வாடகை வருமானம் தரக்கூடிய அதே வேளையில் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய பகுதிகளாக தேர்வு செய்து வீடுகளை வாங்கி வாடகைக்கு விடுத்திருக்கிறார்.
இதுவே சிட்னியில் முதலிலேயே நான் ஒரு வீட்டினை வாங்கி இருந்தால் என்னுடைய இத்தனை ஆண்டுகால வருமானத்தையும் அதற்காக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்கு சொந்தமாக இருபது வீடு இருக்கிறது என கூறுகிறார். அவருடைய இந்த ஐடியா பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஒரு வீட்டை வாங்கி நம் பணம் முழுவதையும் அங்கேயே குவித்துவிடாமல் பல இடங்களில் பன்முகத்தன்மை படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications