நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் இந்த காலத்தில் பலருக்கு இந்த செல்வம் கிடைப்பது மிக அரிதாகி விட்டது.
இன்னும் சொல்லப்போனால், பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் நோய் இல்லாமல் சந்தோஷமாக வாழ்கிறோமா? என்றால் பலரும் இல்லை என்று தான் கூறுகிறார்கள். ஆக இத்தகைய காலகட்டத்திற்கு நடுவில் நமக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

சரி ஹெல்த் இன்சூரன்ஸ் நமக்கு எதற்கு? நான் தான் நல்லா இருக்கிறேனே என்றால்? அதற்கும் பதில் உண்டு. ஒரு வேளை உங்களுக்கு தீடிரென்று கணிக்க முடியாத அளவு மருத்துவ செலவுகள் ஏற்பட்டால், அதனை சரிகட்ட தான் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ். குறிப்பாக மருத்துவ செலவுகளுக்கு அந்த நேரத்தில் நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
நாளுக்கு நாள் மருத்துவ செலவுகள் உயர்ந்து வரும் நிலையில், அதிலும் முன்னர் எல்லாம் காய்ச்சல் என்றால் ஒரு பாராசிட்டமல் மாத்திரையை போட்டுக் கொண்டால் சரியாகி விடும் என்ற காலம் போய்விட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் போன்ற வித்தியாசமான தொற்று நோய்களும் பரவி வருகின்றன.
ஆக இதுபோன்ற அவசர காலத்தில் இந்தியர்களில் பலரும் பெரிதும் நம்புவது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியையே. ஆனால் தொடக்கத்தில் இருந்தே உங்கள் சம்பளத்தில் இருந்து, உங்களுக்கு என்றே சிறிது தொகையை ஒதுக்கி விடலாம். இன்னும் சொல்லப்போனால் இதிலும் குரூப் பாலிசிகளை தேர்தெடுத்துக் கொண்டால் உங்களது குடும்பத்தில் அனைவரும் பயன் பெற முடியும்.
சரி எவ்வளவு தொகைக்கு பாலிசிக்கு எடுக்கலாம்? குறிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம். இந்த பாலிசியை பொறுத்த வரையில் வயதினை அடிப்படையாகக் கொண்டோ, வருமானத்திற்கு தகுந்தோ? எந்த அளவும் கிடையாது. ஆனால் உங்களுக்கு மருத்துவ செலவுகள் எவ்வளவு செலவு ஆகும் என்ற கணிப்பு இருந்தால் அதற்கேற்றவாறு நீங்கள் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு செலவுக்கு பணம் தேவை எனில், அதற்கேற்றவாறு ஆரம்பத்திலேயே திட்டமிட்டு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என நினைத்தால் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது குறிப்பிட்ட தொகை தேவை எனில் அதற்காக ஹாஸ்பிட்டல் கேஸ் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இதே கேன்சர், இதய அறுவை என தீவிர சிகிச்சைகளுக்கான செலவினை குறைக்க க்ரிட்டிகல் இல்னஸ் இன்சூரன்ஸினை எடுத்து பயன் பெறலாம்.
இதே நீண்டகால ஆரோக்கிய மராமரிப்புகாக லாங்க் டெர்ம் ஹெல்த் கேர் பாலிசியினை தேர்வு செய்யலாம்.
இதே திடீர் விபத்து, அதனால் வருமான இழப்பு ஏற்படும் போது நிதி உதவி பெற ஆக்ஸிடென்ட் பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம். இப்படியாக பாலிசிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொண்டு, உங்கள் திடீர் மருத்துவ செலவுகளை இதன் மூலம் க்ளைம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications