இன்றெல்லாம் தனிநபர் கடன்களை வாங்குவது அதிகரித்துவிட்டது. அதற்கு ஏதுவாக பல்வேறு வங்கிகளும் தற்போது தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றனர். தனிநபர் கடன்களை விரைவாக பெற்றுவிட முடியும். அதே வேளையில் இதற்கான வட்டியும் சற்று அதிக அளவில் இருப்பதால் தனிநபர் கடன்களை வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களை தெரிந்து கொண்டு பெற வேண்டும். இல்லை எனில் தேவையில்லாத நிதி சிக்கலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
பர்சனல் லோன் என்று சொல்லப்படுகிற தனிநபர் கடன்களை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வழங்குகின்றன. திடீர் செலவுகள், மருத்துவமனை செலவுகள், குழந்தைக்கான கல்வி செலவுகள் என பலவற்றுக்காகவும் மக்கள் தனி நபர் கடன்களை தேர்வு செய்கின்றனர். அப்படி தேர்வு செய்து வாங்குவதற்கு முன்பு EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துவது அவசியம்.

EMI கால்குலேட்டர் என்றால் என்ன?: EMI கால்குலேட்டர் என்பது நீங்கள் எவ்வளவு தொகை வாங்க இருக்கிறீர்கள் அதற்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும்? எவ்வளவு ரூபாய் EMI கட்ட வேண்டும் என்பதை எளிதாக தெரிந்து கொள்ள உதவும். கணக்கு போடுவதற்கு ஏதுவாக நாம் கால்குலேட்டர்களை பயன்படுத்துகிறோமோ அதே போல இந்த EMI கால்குலேட்டர்களையும் பயன்படுத்தலாம்.
கடன் விருப்பங்களை ஒப்பிடுதல்: கடன் வழங்குபவர்கள் வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் வெவ்வேறு வட்டி விகிதங்களில் கடன்களை வழங்குகின்றனர். ஆன்லைன் EMI கால்குலேட்டர் இந்த விருப்பங்களை எளிதாக ஒப்பிட்டு பார்க்க உதவுகிறது. பல வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் கடன் தொகைகளை என்டர் செய்வதன் மூலம் உங்கள் இஎம்ஐ தொகையை நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தகவல் அறிந்து முடிவுகளை எடுக்கலாம். இதற்காக பிரத்தியேகமாக அந்தந்த வங்கிகளே ஆன்லைன் கால்குலேட்டர்களை வழங்குகின்றன. இணையதளங்களில் நீங்கள் எந்த வங்கிக்கு சென்று கடன் வாங்க இருக்கிறீர்களோ அந்த ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.
நிதி திட்டமிடல் : EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை என்னவென்றால் இது உங்கள் மாதாந்திர EMI தொகையை தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. உங்கள் கடன் தொகை, தவணைக் காலம் மற்றும் வட்டி விகிதத்தை என்டர் செய்வதன் மூலம் உங்கள் மாதாந்திர தவணைத் தொகையை எளிதாக தெரிந்து கொள்ளலாம். கூடுதலாக இந்த கட்டணங்கள் உங்களுடைய மாதாந்திர செலவுகளுக்குள் ஒத்துப் போகிறதா? கடனையும் செலுத்தி பிற செலவுகளை கையாள முடியுமா? என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
பட்ஜெட்: உங்கள் மாதாந்திர தவணை தொகையை தெரிந்து கொண்டு முடிவெடுப்பது உங்கள் பட்ஜெட்டுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம் உங்களுடைய EMI தொகை பட்ஜெட்டுக்குள் அடங்குகிறதா? அதைத் தாண்டி செலவாகுமா? அப்படி செலவு செய்யப்பட்டால் எதிர்காலத்தில் வரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா? என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
வட்டி விகிதங்கள்: முன்கூட்டியே கடன் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு கடன் பெறுவதனால், குறைந்த வட்டி விகிதத்துடன் கடன் வழங்கும் வங்கியை தேர்ந்தெடுத்து கடனை பெற முடியும். இதனால் வட்டிச் செலவைக் குறைக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications