ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்தது. ரெப்போ விகிதத்தை குறைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்றும், FD வட்டி விகிதங்கள் குறையலாம் என்றும் நிபுணர்கள் கூறிவருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 6 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே இருந்தது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2020-ம் ஆண்டு மே மாதம் ரெப்போ விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ குறைக்கப்பட்டுள்ளதால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, ரெப்போ விகிதத்துடன் இணைத்து கடன் வாங்குபவர்கள் உடனடி அல்லது குறுகிய காலக் குறைப்பைக் காண்பார்கள் என்றும், MCLR அடிப்படையில் இணைக்கப்பட்ட கடன்களைக் கொண்டவர்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
MCLR என்பது மார்ஜினல் காஸ்ட் லெண்டிங் ரேட்டைக் குறிக்கிறது. இதன் மூலம், ரெப்போ விகிதம் ஏற்ற இறக்கம் ஏற்பட்டவுடன் வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றுகின்றன.
வங்கிகளுக்கு MCLR ஏன் முக்கியமானது: குறைந்தபட்ச கடனுக்கான விலை அல்லது MCLR என்பது ஒரு குறிப்பிட்ட கடனுக்காக வங்கியால் விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இது கடனுக்கான வட்டி விகிதத்தின் குறைந்த வரம்பைக் குறிப்பிடுகிறது. இந்த விகித வரம்பு கடன் வாங்குபவர்களுக்கு வெவ்வேறு கடன் காலங்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்கப்படும். MLCR விகிதம் அதிகரிக்கும் போது கடன் வட்டி விகிதமும் அதிகரிக்கலாம். MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும்போது வழங்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். வங்கிகள் இதற்கு குறைவான வட்டிக்கு கடன் தர முடியாது.
அதன்படி, தற்போது, வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, MCLR அடிப்படையிலான வட்டி விகிதங்களை பெற இரண்டு காலாண்டுகள் நேரம் எடுக்கும். அதாவது, புதிய வைப்புத்தொகைகளில் மட்டுமே மாற்றங்கள் நிகழும். அந்தவகையில், வைப்பு விகிதங்களுக்கு பணவியல் கொள்கை பரிமாற்றம் செய்ய சுமார் இரண்டு காலாண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும், "வங்கிகள் உடனடியாகவோ அல்லது குறுகிய காலத்திலோ ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
MCLR அடிப்படையிலான கடன்கள், வங்கியின் நிதிச் செலவு, வைப்பு விகிதங்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவதால், விகிதக் குறைப்புகளைப் பிரதிபலிக்க அதிக நேரம் எடுக்கும். வைப்புத்தொகைகளுக்கான அதிக போட்டி, பணப்புழக்கப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த நிதிச் செலவுகள் ஆகியவற்றால், வங்கிகள் முழுப் பலனையும் விரைவில் வழங்க முடியாது.
மேலும், கூடுதல் பணப்புழக்க நடவடிக்கைகள் இல்லையென்றால், மார்ச் மாத இறுதிக்குள் வங்கிகள் ரூ.2.5 லட்சம் கோடி வரை பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். MCLR-அடிப்படையில் கடன் வாங்குபவர்களுக்கு, வட்டி விகிதக் குறைப்பு செய்ய இரண்டு காலாண்டுகள் ஆகலாம். இந்தக் கடன்கள் பொதுவாக ஆறு மாத கால அளவை மீட்டெடுக்கும், அதாவது திருத்தப்பட்ட விகிதங்கள் அடுத்த ஆண்டுதான் நடைமுறைக்கு வரக்கூடும்.
ஆனால், ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கு விரைவான பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். இந்தக் கடன்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை விகிதத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் உடனடியாக விகித மாற்றங்களை, பொதுவாக ஒரு மாதத்திற்குள், நிறைவேற்ற வேண்டும் என்பது கட்டாயம், இதன் விளைவாக, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களைக் கொண்ட கடன் வாங்குபவர்கள், MCLR இன் கீழ் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, EMIகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications