மார்ச் 8ம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகின்றது. பெண்களுக்கான முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகம் முழுவதுமே பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வரும் பெண்களுக்கும், எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தங்களது குடும்பத்திற்காக வாழும் அவர்களுக்கு நம் வாழ்த்துகளை சொல்லிக் கொள்வோம்.
இப்படி அடுத்தவர்களுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பெண்கள், தங்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ்
இன்றும் மக்கள் மத்தியில் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. இது அவர்களை மட்டும் அல்ல அவர்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்க பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. இது ஹெல்த் ரீதியாக மட்டும் அல்லாது, நிதி ரீதியாகவும் பெரும் பயனுள்ள ஒன்றாக இருக்கின்றது. இது அவசர காலகட்டத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகளை குறைக்க பயனுள்ள ஒன்றாக உள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம்
குறிப்பாக பெண்களை பொறுத்தவரையில் தொடர்ந்து தங்களது உடல் நிலையை கண்காணித்து வரவேண்டிய நிலையில் உள்ளனர். பல பெண்களுக்கும் மார்பக புற்று நோய் என பல பிரச்சனைகள் உள்ளன. ஆக அவர்கள் கட்டாயம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது மிக அவசியமான ஒன்று. அவ்வாறு எடுக்கப்படும் இன்சூரன்ஸில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அதிகளவில் க்ளைம் செய்யும் விதமாக இருக்கணும்
பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல நூறு பாலிசிகளை வழங்குகின்றன. எனினும் உங்களுக்கு தேவையானது எது? எதில் க்ளைம் அதிகம். பிரீமியமும் குறைவாக இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அது உங்களுக்கு ஏற்றதா என அலசி பார்க்க வேண்டும். இது உங்களை நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வழிவகுக்கும்.
என்னவெல்லாம் கவர் ஆகும்?
சிலர் ஹெல்த் இன்சூரன்ஸ் என எடுத்துக் கொண்டு பெரியளவில் ஏதேனும் பிரச்சனை எனில், க்ளைம் செய்ய முடியாமல் தவிப்பர். ஆக இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும் பிரச்சனை தான். குறிப்பாக நீண்டகாலம் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், புற்று நோய் பிரச்சனை, சர்க்கரை நோய் என நீண்ட பிரச்சனை உள்ளவர்கள் இதனை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
விரிவானதொரு க்ளைம் கிடைக்குமா?
நீங்கள் எடுக்கும் பாலிசியில் எந்த மாதிரியான சேவைகளுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியும். குறிப்பாக ஆம்புலன்ஸ் கட்டணங்கள், மருத்துவமனைக்கு செல்லும் முன் பின் செலவுகள் உள்ளடங்குமா? மகப்பேறு எனும்போது பிரசவத்திற்கு பின்பும், முன்பும் கவர் ஆகுமா? ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக உங்களின் தேவைக்கு ஏற்ப உங்கள் பாலிசி கவர் ஆகிறதா? என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
காப்பீட்டு தொகை அதிகரிப்பு
நீங்கள் வருடா வருடம் பாலிசி போடுபவர்கள் எனில், அதனை க்ளைம் செய்யவில்லை எனில், உங்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் அம்சங்களும் உள்ளன. அதோடு உங்களது பாலிசியின் மொத்த கவரேஜில் 600% ஆக அதிகரிக்க உதவும். உங்களின் கவரேஜ் விகிதம் 10 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். ஒரு வேளை நீங்கள் 7 வருடம் க்ளைம் செய்யவில்லை எனில், 70 லட்சம் வரையில் கூட அதிகரிக்கலாம். ஆக இது எதிர்காலத்தில் பயனுள்ள ஒன்றாக இருக்கும். இது உங்களின் மருத்துவ பாதுகாப்பினை அதிகரிக்கும்.
கூடுதலான பெனிபிட்
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் மக்கள் ஒரு பெரிய அழுத்தத்தில் தான் இருந்து வருகின்றனர். குறிப்பாக பல சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு ஆண்டில் ஒரு பாலிசியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் நீங்கள் க்ளைம் செய்துவிட்டால், அல்லது உங்களது கவரேஜ் இலக்கு எட்டப்பட்டால் உங்கள் பாலிசி தானாகவே புதுப்பிக்கப்படலாம். ஆக இதன் மூலம் தேவைப்பட்டால் நீங்கள் கூடுதலாக கூட அனுமதிக்கிறது. ஆக இது ஒரு நல்ல விஷயம். ஏனெனில் இது எதிர்பாராத அவசர காலகட்டங்களில் பயனுள்ள ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒப்பிட்டு பாருங்கள்
உங்கள் பாலிசிக்கு என்னென்ன ஆவணங்களை நிறுவனங்கள் கேட்கின்றன. அதேபோல அதற்கான கட்டணங்கள் எவ்வளவு கேட்கின்றன என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஆக இதுவும் நீங்கள் பாலிசி எடுக்கும் முன்பு கவனிக்க வேண்டிய அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ், அங்கு பெண் மருத்துவர்கள் இருக்கிறார்களா? என பலவற்றையும் அலசி ஆராய்ந்து உங்களுக்கு ஏற்றதொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக பெண்களை தாக்கும் நோய்களும் கவர் ஆகுமா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications