விழாக்கால பருவம் நெருங்கி வரும் இந்த சமயத்தில் பல்வேறு வங்கிகள் நிதி நிறுவனங்கள் என போட்டி போட்டுக் கொண்டு, வட்டியை குறைத்து வருகின்றன.
இது வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பே எனலாம். ஏற்கனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் வீட்டு விலையானது சற்று குறைந்துள்ளது எனலாம். அதோடு வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், இது வீடு கட்ட வாங்க சரியான நேரம் எனலாம்.
யெஸ் வங்கி வட்டி குறைப்பு
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் வங்கி யெஸ் பேங்க். யெஸ் வங்கியானது YES Premier Home Loans என்ற சலுகையினை அறிவித்துள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு 6.7% வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. சில்லறை சந்தையில் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக இவ்வங்கி மற்ற முன்னணி வங்கிகளை தொடர்ந்து அதே அளவு வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.
பெண்களுக்கு கூடுதல் சலுகை
ஆக இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் மிக நல்ல வாய்ப்பு எனலாம். யெஸ் வங்கியின் இந்த சலுகையானது பெண் வாடிக்கையாளர்கள் எனில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கூடுதலாக 0.05 அடிப்படை -புள்ளிகள் வட்டி சலுகையை அறிவித்துள்ளது. ஆக பெண்களுக்கு இது ரொம்ப நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.
எத்தனை ஆண்டுகால அவகாசம்
சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ், 35 ஆண்டுகால அவகாசத்திற்கு கடன் பெற்றுக் கொள்ள முடியும். குறைவான ஆவணங்களோடு, ப்ரீபேமெண்ட் கட்டணங்கள் என எதுவும் இல்லை. மேலும் யெஸ் வங்கியின் இந்த சலுகையானது பேலன்ஸ் டிரான்ஸ்பர் மற்றும் வீடு வாங்குதல் உள்ளிட்டவற்றிற்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
கனவை நனவாக்க உதவும்
இது குறித்து யெஸ் வங்கியின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பிரசாந்த் குமார், யெஸ் வங்கியின் இந்த சலுகையானது வீடு வாங்க, கட்ட நினைப்பவர்களுக்கும், அவர்களது கனவினை நினைவாக்க நினைப்பவர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் தங்களது வீட்டுக் கடன் அளவினை இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஐயில் என்ன சலுகை?
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வீட்டுக் கடனுக்கான சலுகையினை சமீபத்தில் அறிவித்தது. இந்த சலுகையின் படி வட்டி விகிதம் 6.7%ள் இருந்து தொடங்குகிறது. இதற்கு செயல்பாட்டு கட்டணத்தினையும் ரத்து செய்துள்ளது. அதோடு இந்த கடன் சம்பதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்
எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் முதல் நிதி நிறுவனமாக வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதமே வட்டி விகிதத்தினை 6.66% ஆக குறைத்தது. இது 50 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்கும் வாடிக்கையாளார்களுக்கு இது பொருந்தும் என கடந்த ஜூலை மாதமே அறிவித்தது. தற்போது இந்த சலுகையானது 2 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கு 6.66% வட்டி விகிதம் பொருந்தும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications