ற்போது மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் எந்த மியூச்சுவல் ஃபண்டினை தேர்வு செய்வது , நீண்ட கால அடிப்படையில் எந்த மியூச்சுவல் ஃபண்டு கணிசமான லாபத்தை பெற்று தரும் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்துவரை நீண்ட காலத்திற்கு செய்யும் முதலீடு பெரிய லாபத்தை ஈட்டித் தரும். காம்பவுண்டிங் முறையில் மியூச்சுவல் ஃபண்டுகள் நமக்கு லாபம் தருகின்றன.

மியூச்சுவல் ஃபண்டுகளில் சிறு வயதில் இருந்தே முதலீடு செய்தால் குறைந்த தொகையே உங்களுக்கு பெரிய லாபத்தை பெற்று தரும். அந்த வகையில் 60 வயதில் ஓய்வு பெற இருக்கும் ஒரு நபர் எந்தெந்த வயதில் எவ்வளவு முதலீடு செய்தால் கோடீஸ்வரனாக முடியும் என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.
20 வயது நபர்: உங்களுக்கு 20 வயதாகிறது, நீங்கள் 60 வயதில் ஓய்வுபெற இருக்கிறீர்கள் என்றால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஐ எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யுங்கள். ஆண்டுக்கு 12 % ரிட்டன்ஸ் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் ரூ.1,000ஐ 40 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 60ஆவது வயதில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ.1.19 கோடி. நீங்கள் செய்த முதலீடு 4.80 லட்சம் தான் ஆனால் கிடைத்த ரிட்டன்ஸ் பல மடங்கு.
30 வயது நபர்: ஒருவேளை நீங்கள் 30 வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்றால், ஆண்டுக்கு 12% லாபம் தரும் ஃபண்டில் மாதம் ரூ.3,000ஐ முதலீடு செய்ய வேண்டும். 30 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு ரூ.10.80 லட்சம், ஆனால் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்ஸ் ரூ.1.05 கோடி.
40 வயது நபர்: உங்களுக்கு 40 வயதாகிறது, நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. இங்கே முதலீட்டுக்கான காலம் குறைவு. எனவே அதிகபட்ச தொகையை மாதந்தோறும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும்.
மாதந்தோறும் ரூ.11,000 என அடுத்த 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 60 வயதில் நீங்கள் செய்த முதலீடு ரூ.26.40 லட்சம், உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்ஸ் ரூ.1.09 கோடி.
இந்த உதாரணங்களிலேயே நமக்கு புரிந்து விடும், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை சிறு வயதிலேயே தொடங்கிவிட்டால், குறைந்த தொகையிலேயே பெரிய லாபம் காணலாம். வயது ஏற ஏற உங்களின் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications